‘புருஷனை’ நாயாக்கி வாக்கிங் சென்ற மனைவி; இது புதுசா இருக்குல..

13 January 2021, 3:17 pm
Quick Share

கனடாவில் இரவு நேர லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில், கணவனை, நாய் பெல்ட்டில் கட்டி, வெளியே அழைத்து சென்று, ஊரடங்கு விதிகளை மீறிய பெண்ணுக்கு, போலீசார் கடும் அபராதம் விதித்தனர்.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸின் அடுத்த அலை வீச துவங்கியிருக்கிறது. கனடா நாட்டிலுள்ள கியூபெக் பகுதியில், கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து வரும் காரணத்தால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 8 மணி முதல், மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனை நாய் கட்டும் பெல்டை கொண்டு, கழுத்தில் கட்டி, நாயைப் போல வாக்கிங் அழைத்து வெளியே சென்றுள்ளார். இதனை கண்ட போலீசார் அவரிடம் அழைத்து விசாரணை நடத்த, தான் ஊரடங்கு விதிகளை மீறவில்லை எனவும், நாயை வாக்கிங் அழைத்து செல்ல சிறப்பு தளர்வு உண்டு எனவும் வாதாடினர்.

அதற்கு போலீசார், நாயை அழைத்து போக சொன்னால், கணவனையா இவ்வாறு செய்வாய் என புத்தி கூற, அந்த பெண் ஒத்துழைக்காமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். அவர்களை எச்சரித்த போலீசார், 3 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதித்துள்ளனர். வெளியேவும் போகணுமாம்.. விதிகளையும் பின்பற்றுவார்களாம்.. ஆனால் நாய்க்கு பதில் கணவனாம்.. என்ன கொடுமை சார் இது… அந்த கணவன் பாவம் தான்…