பழைய சோத்தை திங்காதேனா கேக்குறியா? கொள்ளை அடிக்கும் போது தூங்கிய ஹஸ்கி நாய்!

1 March 2021, 7:59 pm
Quick Share

தாய்லாந்தில் நாய் ஒன்று, நகைகடைக்கடையில் கொள்ளை அடிக்கும் போது தூங்கி கொண்டிருக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு பாதுகாப்பு நாயின் முக்கிய பணி, தன்னை சுற்றி அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்தால், அங்கிருப்பவரகள் குரைத்து உஷார் படுத்துவதுதான். ஆனால் இங்கு ஒரு நாயை பாருங்கள். தாய்லாந்தின் சியாங் மாயில் அமைந்துள்ள ஒரு நகைக் கடையில், கொள்ளையர்கள் புகுந்து, ஆயுதங்களை காட்டி கொள்ளை அடிக்கும் போது, அந்த நாய் தூங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இது பாதுகாப்பு நடவடிக்கையை ஆராய்வதற்காக நடத்தப்பட்ட போலி கொள்ளை ஆகும்.

ஹஸ்கி இன நாயான லக்கி, வொராவத் லோம்வானாவோங்கில் உள்ள நகை கடையில், பாதுகாப்புக்காக இருக்கிறது. அப்போது கடையில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சோதனை செய்யும்பொருட்டு, போலி கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொள்ளையர்கள் போல் வேடமிட்ட நபர்கள், துப்பாக்கியை காட்டி, அந்த நகைக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றனர். துப்பாக்கியை காட்டி, அனைத்தையும் கொடுக்கும்படி, மிரட்ட துவங்கினர்.

ஆனால், லக்கி நாய் அங்கு நடக்கும் கூச்சல் குழப்பங்களை கண்டு கொள்ளாமல், அயர்ந்து குறட்டை விட்டு தூங்குகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த நகைக்கடை மற்றும் நாயின் உரிமையாளரான சலித்து பாண்டே கூறுகையில், கடைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என்பதற்காக, உள்ளூர் போலீசார், இந்த போலி கொள்ளையை ஏற்பாடு செய்திருந்தனர். போலீஸ்காரர் ஒருவர் கொள்ளையனாக நடித்தார். ஆனால் அவரை என் நாய் அடிக்கடி சந்தித்திருப்பதால் எதிர்க்கவில்லை’ என்றும் கூறினார்.

Views: - 4

0

0