மூக்கின் அழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்த நடிகை! கடைசியில் இப்படி ஆயிடுச்சே!!

7 February 2021, 10:43 pm
Quick Share

மூக்கின் அழகை அதிகரிக்க நினைத்த பிரபல சீன நடிகை ஒருவர், தனது வாழ்க்கையையே அது சோகமாக மாற்றும் என சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அறுவை சிகிச்சையால் அவரது மூக்கு கறுத்துப்போக, என்னைப்போல் யாரும் செய்ய வேண்டாம் என அட்வைஸ் மழை பொழிந்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது உடலமைப்பை மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடிகைகள் பலரும், முக அழகு, உதடு, மூக்கு என தன் உடலின் பாகங்களை அழகுபடுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். ஒரு பழமொழி ஒன்று உள்ளது. ‘இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்’ என்பது. அப்படி தனக்கு சிறப்பாக இருப்பதை, மேலும் சிறப்பாக மாற்ற மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சை இந்த நடிகைக்கு எப்படி முடிந்து விட்டது என பாருங்கள்..

சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையான காவ் லியூ. இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்ததால், மிக பிரபலமாக இருந்தார். தனது மூக்கின் அழகை மேலும் அழகாக்கி, பட வாய்ப்புகள் குவிய செய்யும் நோக்கத்தில், மூக்கின் நுனியில் உள்ள குருத்தெலும்பில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம், அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது. 61 நாட்கள் மருத்துவமனையில் தங்கி, 45 லட்ச ரூபாய் செயவு செய்து இந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார். ஆனால், இது அவருக்கு ஒத்துக் கொள்ளாததால், அவரது மூக்கு நுனி கறுப்பாக மாறிவிட்டது. இதனால் மனம் வெதும்பி போய் இருக்கிறார் அந்த நடிகை. அவரது எதிர்கால வாழ்க்கையும் அந்தரத்தில் ஊசலாடி கொண்டுள்ளது.

தனக்கு நடந்த சம்பவம் குறித்து அந்த நடிகை, வெய்போவில் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘என் மூக்கில் நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி நான்கு மணி நேரம் நடந்தது. இதனால் நான் அழகாக மாறுவேன் என நினைத்தேன். ஆனால், அது மோசமான கனவின் துவக்கமாக மாறிவிட்டது. என் போல் யாரும் முயற்சி செய்ய வேண்டாம்’ என பதிவிட்டார். நெட்டிசன்கள் பலரும் அவரது நிலைக்காக வருத்தப்பட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0