முகப்பருவை கையால் உடைத்ததால் மரணத்தை சந்தித்துவிட்டுத் உயிர்த் திரும்பிய சீனர்

13 January 2021, 9:49 pm
Quick Share

சீனாவில் தன் முகத்திலிருந்த பருவை தன் கையால் உடைத்தவர் மரணத்தை அருகில் சென்று சந்தித்து வந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்தவர் சென், கடந்த டிசம்பர் மாதம் அவரது முகத்தில் நாடிப்பகுதியில் சிறிய பரு ஏற்பட்டுள்ளது. பொதுவாக நம் முகத்தில் பரு ஏற்பட்டால் அதை நாம் கையாலேயே உடைப்போம் இல்லையா, அதே போல இவரும் தன் கையால் அந்த பருவை உடைத்துள்ளார். உடைத்த சில மணி நேரங்களில் இவர் முகத்தில் பரு இருந்த இடம் பெரிதாக வீங்கி சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சென்னின் மனைவி அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு இரண்டு நுரையீரலிலும் நிமோனியா தாக்கியுள்ளதைக் கண்டறிந்தனர். பின்பு அவரை ஐசியூவார்டில் சேர்த்து அதற்கான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். தற்போது அவர் மெல்ல மெல்லத் தேறி வருகிறார்.

சென்னிற்கு சிகிச்சையளித்த டாக்டர் ஷூ இது குறித்துக் கூறும் போது: ” மனிதனின் நெற்றிப் பொட்டு பகுதியிலிருந்து வாய் பகுதிவரை ஒரு முக்கோண பகுதியை மருத்துவத்தில் “Triangle of death” என அழைப்போம் இந்த பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடலில் மிக முக்கியமான பிரச்சனைகளுடன் தொடர்பு இருக்கலாம். இந்த பகுதியில் பரு ஏற்பட்டால் அதை கையால் உடைப்பது மிகவும் ஆபத்தானது. சென்னை பொறுத்தவரையில் அவரது நுரையீரலில் உள்ள பிரச்சனை தான் முகத்தில் பருவாக அறிகுறி காட்டியுள்ளது. அதை அவர் உடைத்ததும் அவருக்கு அது பெரும் ஆபத்தாக மாறி விட்டது. இவர் வீக்கம் ஏற்படவும் மருத்துவமனைக்கு வந்ததால் அவரை காப்பாற்ற முடிந்தது. சற்று தாமதித்திருந்தாலும் அவர் உயிரே போயிருக்கக்கூடும். சென் மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார் என்றே கூறவேண்டும்.” எனக் கூறினார்.