அபார்ட்மென்ட்டில் 20 ஆண்டுகளாக வீடு துடைப்பவருக்கு செம ‘கிப்ட்’! என்னனு பாருங்க

27 January 2021, 8:03 pm
Quick Share

நியூயார்க்கில் அபார்ட்மென்ட் ஒன்றில், வீடு துடைத்த ரோஸா என்ற பெண் ஒருவருக்கு, அந்த அப்பார்ட்மென்டில் வசிப்பவர் ஒருவரே, தங்கள் அபார்ட்மென்டிலேயே கிப்ட்டாக, வீடு ஒன்றை லீசுக்கு வழங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகில் உள்ள அனைவருக்கும் 2020 கடுமையான காலமாக மாறியது. வைரஸ் பரவல் காரணமாக பலர் வேலை இழந்தனர். இதன் விளைவாக, அவர்கள் கடுமையான நிதி சிக்கல்களில் சிக்கி கொண்டனர். ஆனால், இதுபோன்ற காலங்களில்தான் மிகவும் அன்பான மற்றும் இதயத்தை இளக்கும் மற்றொரு பக்கத்தை உலகம் கண்டது. அப்படி சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் நியூயார்க்கில் ஆடம்பரமான கட்டிடத்தில் ஒரு துப்புரவாளர் ஒரு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ரெடிட் வலைதளத்தில் முதலில் பகிரப்பட்ட வீடியோ வைரலானதுடன், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் லிப்ட்டில் பயணிக்கும் ஒருவர், அருகில் இருக்கும் பெண் குறித்து பேப்பர் கார்டாக காட்டுகிறார். அதில், அந்த பெண்ணின் பெயர் ரோஸா. 20 ஆண்டுகளாக அபார்ட்மென்டில் துப்புறவாளராக பணியாற்றுகிறார். இருப்பினும் கொரோனா பரவலின் போது அவர் வேலை பறிபோய் உள்ளது. அங்கு வசிப்பவர்களை அவரை மிகவும் நேசிப்பதாகவும், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அந்த பேப்பர் கார்டில் எழுதப்பட்டிருந்தது.

லிப்ட் நின்றதும் துப்புறவு உபகரணங்களை தனது தோலில் தூக்கி செல்லும் ரோஸா, தனக்கு தான் அந்த பரிசு என தெரியாமல், வீடு துடைக்க அழைத்து செல்லப்படுவதாக நினைத்து கொள்கிறார். குறிப்பிட்ட அந்த வீட்டை அடைந்ததும், அந்த வீட்டின் அழகை கண்டு ரசிக்கிறார். அந்த அபார்ட்மென்ட்டில் நான்கு அறைகள் மற்றும் மூன்று குளியலறைகள் மற்றும் ஒரு மொட்டை மாடி உள்ளது. இதனை கண்டு ஆச்சரியத்தில் இருக்கும் போதே, அடுத்த இரண்டு ஆண்டுகள் இது உங்களுக்கு தான் சொந்தம் என கிப்ட் அளிக்கும் நபர் கூறுகிறார். லீஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு வீட்டின் சாவியை எடுத்துக் கொள்வது மட்டும் தான் உங்கள் வேலை என அவரிடம் கூறுகிறார்.

மற்றொருவர், கடந்த 20 ஆண்டுகளாக விஸ்வாசமாக பணியாற்றியதற்காக எங்களின் நன்றியுணர்வு என கூற, ‘‘ஓ மை காட்.. இதனை நம்ப முடியவில்லை’’ என்ற அழுதவாறு கூறக்கொணடே ஆனந்த கண்ணீர் விடுக்கிறார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்களும் உருகுகின்றனர்.

Views: - 0

0

0