இந்த விளையாட்டு நல்லாருக்கே..! குட்டி பாண்டாவின் சுட்டித்தனம் வைரல்

29 January 2021, 4:24 pm
Quick Share

பாண்டா கரடி குட்டி ஒன்று, தனது பாதுகாவலரின் கால்களை கவ்வி கொண்டு விட மறுத்து செய்யும் சேட்டை, காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெய்ஜிங் – சியோல் உடன்படிக்கையின் போது, ஏழு வயது ஆன பெண் பாண்டாவான ஐ பாவ் மற்றும் எட்டு வயது ஆண் பாண்டாவான லு பாவோவை கடந்த 2016 ஆம் ஆண்டு சீனா, தென் கொரியாவுக்கு பரிசாக வழங்கியது. சியோலுக்கு அருகிலுள்ள எவர்லேண்ட் மிருகக்காட்சிசாலையில் வைத்து இந்த பாண்டாக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த காதல் ஜோடிகளுக்கு, கடந்த ஜூலை மாதம் ஃபூ பாவோ என்ற அழகிய பெண் பாண்டா குட்டி ஒன்று பிறந்தது.

கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பார்வைக்கு இதுவரை இந்த பாண்டா குட்டி கொண்டுவரப்படாத நிலையில், அந்து குட்டியின் கியூட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளது. தனது பாதுகாவலரின் காலை கட்டிக் கொண்ட இந்த ஆறு மாதமே ஆன பாண்டா குட்டி, குழந்தை போல் செய்யும் பாவனைகளை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றில பூங்கா முழுவதும் சுற்றி விளையாடுவது, மரம் ஏற முயற்சி செய்து, பல்டி அடிப்பது என பூங்காவையே தனது சேட்டையால் ரணகளம் செய்து வருகிறது இந்த குட்டி. திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் வகையில் உள்ள இந்த பாண்டா குட்டியின் சேட்டைகளால், இன்டர்நெட்டில் சிரிப்பலைகள் நிரம்பி வருகின்றன. வீடியோ பார்த்த உங்களுக்கும் சிரிப்பு குபீரென வந்திருக்கும் தானே..!

Views: - 0

0

0