கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டால் சலுகையில் உணவு : துபாய் உணவகம் அறிவிப்பு

27 January 2021, 10:36 am
dubai Food rEstarurant -Updatenews360
Quick Share

மக்கள் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் துபாயில் ஒரு உணவகம், கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்களுக்குச் சலுகைகளை அறிவித்துள்ளது.

துபாயில் உள்ள கேட்ஸ் மருத்துவமனை நிர்வாகம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறது. அந்த உணவகத்தில் ஒரு புதிய ஆஃபரை அறிவித்துள்ளனர். அதன் படி அந்த உணவகத்திற்கு டின்னர் சாப்பிட வருபவர்கள் முதல் கட்ட கொரோனா தடுப்பு மருந்தை எடுத்திருந்தால் அவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி என்றும், 2ம் கட்ட மருந்தை எடுத்திருந்தால் 20 சதவீதம் தள்ளுபடி என்றும் அறிவித்துள்ளது. இதற்காக கொரோனா தடுப்பு மருந்தின் போது அளிக்கப்படும் சான்றிதழை உணவகத்தில் காண்பித்து இந்த ஆஃபரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அந்நிறுவனம் தங்கள் சமூகவலைத்தளங்களில் அறிவித்துள்ளது. இது தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது. மக்கள் மத்தியில் இது இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. சிலர் இதை மக்கள் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள ஊக்கமளிக்கும் விஷயமாகும், சிலர் இதை அந்த உணவகத்தை பிரபலப்படுத்த அவர்கள் எடுத்த முயற்சியாகவும் பார்க்கின்றனர்.

இதே போல அந்நாட்டின் ஊபேர் நிறுவனமும் ஜனவரி 25 முதல் பிப்8 வரை தங்கள் சேவையைப் பயன்படுத்தும் கெரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்குச் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 10 மில்லியன் மக்கள் தொகையில் 2.5 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது உலகிலேயே இஸ்ரேலுக்கு அடுத்து இரண்டாவது அதிக மக்களுக்கு கெரோனா தடுப்புகளைக் கொண்டு சென்ற நாடு என்ற பெருமையை அந்நாட்டிற்குப் பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0