இது உண்மை தானா.. இல்ல போட்டோஷாப்பா..! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்

5 February 2021, 8:37 am
Quick Share

மலையின் உச்சியில் நின்று தம்பதியினர் ஆபத்தான முறையில் எடுத்த போட்டோ டுவிட்டரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இது உண்மை தானா.. இல்லை போட்டோ ஷாப் ஒர்க்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி அந்த புகைப்படத்தில் என்ன இருக்கிறது தெரியுமா?

கணவன், மனைவி தங்கள் எவ்வளவு மகிழ்ச்சியான தம்பதிகள் என வெளிக்காட்ட புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இதற்காக தனியாக போட்டோ ஷூட்டும் செய்கின்றனர். அப்படி ஒரு தம்பதியினர் எடுத்த புகைப்படத்தை, ஸ்ரீலா ராய் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஜோடி ஒன்று மலையின் உச்சியில் நின்று போட்டோ எடுத்திருக்கிறது.

பெண் அந்த ஆணின் கையை பிடித்திருக்க, ஆபத்தான முறையில் மலையில் நுனியில் ஆண் நின்று கொண்டிருக்கிறார். எந்த இடம் என தெரியாத அந்த பகுதியில், அதள பாதாளமாக இருக்கிறது. கீழே சாலையும், அதில் வாகனங்கள் செல்வதும் தூரமாக தெரிகிறது. இதனை கண்டு பீதியில் வாய் பிளந்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட அது வைரலானது.

உயிருடன் விளையாடும் இவர்களை ஏன் நீங்கள் தடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், இது உண்மை தானா? இல்லை போட்டோ ஷாப் ஒர்க்கா? என தங்கள் சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். சிலர் இதுபோல் புகைப்படங்களை எடுக்க விரும்பி உயிரிழந்தவர்களின் சோக கதைகளையும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது போட்டோ ஆங்கிள் என கூறியுள்ளனர். போட்டோவை பார்த்தீர்கள் தானே? இப்போது நீங்கள் சொல்லுங்கள்.. இது உண்மையா இல்லை போட்டோ ஷாப்பா?

Views: - 0

0

0