“இலவச உள்ளாடை”க்கு ஆசைப்பட்ட அந்த விஷயத்தில் சிக்கிக்கொண்ட பெண்….

15 January 2021, 4:30 pm
Quick Share

ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சூடுபடித்து வரும் சூழ்நிலையில் அதில் ஏமாத்தும் பேர்வழிகளும் புகுந்துவிட்டனர். இதனால் ஆன்லைன் வர்த்தகத்தில் பல மோசடிகளும் நடந்து வருகிறது. எளிதாக மக்களை கவரும் ஆஃபர்களை அறிவித்து அவர்களிடம் பணம், பொருள் பறிப்பது என வித விதமான மோசடிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி ஒரு மெசெஜ் வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு இதற்கு முன்னர் ஆன்லைனில் அந்நிறுவனத்தில் பொருட்கள் வாங்கியவர்களக்கு அந்நிறுவனம் “இலவச உள்ளாடைகள்” வழங்குவதாகவும்,அதற்காக விண்ணப்பிக்க குறிப்பிட்ட லிங்கை கிளக் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

அதை நம்பி அந்த லிங்கிற்கு சென்று இந்த பெண் தன் அடிப்படை விபரங்களை பதிவு செய்துள்ளார். அந்த விபரங்களை வைத்து அந்த பெண்ணிற்கு ஒரு மர்ம நபர் மெசேஜ் அணுப்பி அந்த பெண்ணின் புகைப்படத்தை வெரிபிகேசனிற்காக அனுப்பிவைக்கும்படி கேட்டுள்ளார். இந்த பெண்ணும் அதை நம்பி தன் புகைப்படத்தை அனுப்பி பின் தான் அந்த நபர் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார். அதன் பின் இந்த பெண்ணிற்கு மோசமாக மெசெஜ் அனுப்பி அந்த நபர் அந்த பெண்ணிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் படி கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண் மறுக்கவே, குறிப்பிட்ட அந்த நபர் ஏற்கனவே இந்த பெண் அனுப்பிய புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து புகைப்படங்களை தயார் செய்துவிட்டதாகவும் நிர்வாண புகைப்படங்களை அனுப்பவில்லை என்றால் அதை ஆன்லைனில் வெளியிட்டுவிடுதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த பெண்ணை மிரட்டி அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மக்களின் செளகரியத்திற்காக வந்த தொழிநுட்பமாக இருந்தாலும் அதில் இன்று ஏகப்பட்ட மோசடிகள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0