குழந்தையாக மாறிய குட்டி ஜம்போ: புட்டியில் பால் குடிக்கும் அழகு காட்சி..!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
7 September 2021, 4:16 pm
Quick Share

காட்டில் தனித்து விடப்பட்ட குட்டியானைக்கு காப்பாளர் ஒருவர் குழந்தைக்கு பால் புகட்டுவது போல கேனில் பால் ஊட்டும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்துள்ளது.

காட்டில் தனித்து விடப்பட்ட குட்டியானைக்கு காப்பாளர் ஒருவர் பாலூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, அதன் காப்பாளர் கூறுகையில், தனித்து விடப்படும் யானைகள் அவைகளது இடத்தில் இருப்பதை போலவே, நாங்களும் பராமரித்து வருகிறோம். இந்த குட்டி யானைகள் வளர்வதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்ட பார்முலாவை நாங்கள் பின்பற்றுகிறோம்.

அவைகளில் முக்கியமானது, எங்கள் கைகளால் அன்பாக உணவளிப்பது என அன்புடன் தெரிவிக்கிறார். பச்சிளம் குழந்தை போலவே பால் குடிக்கும் இந்த குட்டி ஜம்போவின் வீடியோ இணையத்தில் பலரது லைக்குகளை பெற்று வருகிறது.

Views: - 255

0

0