அம்மாடியோ எவ்வளவு உசரம்! சைக்கிளில் இவர் பண்ணிய சாகசத்தை பாருங்க!!

18 January 2021, 6:09 pm
bike climb - Updatenews360
Quick Share

பிரெஞ்ச் தடகள வீரரான ஆரேலியவ் போன்டெனாய், 140 மீட்டர் (459 அடி) உயர, பாரிஸ் வணிக வளாக டவரில் சைக்கிள் மூலம் காலை கீழே ஊன்றாமலேயே, வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உடற்பயிற்சி, ரன்னிங், சைக்கிளிங் போன்றவை உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடியது. சைக்கிள் ஓட்டி உடல் எடை குறைக்கப் போராடும் பலரை பார்த்திருப்பீர்கள். எதிர்காற்றில் சைக்கிள் அழுத்துவது எவ்வளவு கடினம் என அவர்களை கேட்டுப்பார்த்தால் தெரியும். ஆனால் இவர் படைத்த சாதனைகள் என்ன என்பதை கொஞ்சம் பாருங்கள்..

ஆரேலியவ் போன்டெனாய் என்பவர் நோய்களால் கடும் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டும் வகையில், புதிய முயற்சி ஒன்றில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள 140 மீட்டர் அதாவது 459 அடி உயர, பாரிஸ் வணிக வளாக கட்டடத்தில் சைக்கிளில் ஏறி சாதனை படைத்துள்ளார் இவர். 768 படிக்கட்டுகள் கொண்ட இந்த 33 மாடி கட்டிடத்தை, தரைத்தளத்திலிருந்து, மேல்தளம் வரை காலை கீழே வைக்காமல், சைக்கிளில், வெறும் 30 நொடிகளில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

தொண்டு நிறுவனத்துக்கு உதவும் முயற்சியில், குறுகிய நேரத்தில் இவர் செய்த இந்த சாதனைக்காக, பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது சாதனை வீடியோவும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். உதவும் எண்ணம் கொண்டவர்களுக்கு வாழ்வில் என்றும் ஏற்றம் தான் என்பதை, சொல்லாமல் சொல்கிறாரோ இவர்!

Views: - 4

0

0