டெல்லியில் மதுபானக் கடைகளை திறக்க கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுத்த பாட்டி

1 May 2021, 2:12 pm
Quick Share

மருந்தை விட ஆல்கஹால் தான் முக்கியம் என ஒரு பெண் சமீபத்தில் வாதிட்ட வீடியோ ஒன்று செம வைரலானது. அந்த பெண்ணின் பெயர் டோலி. அவர் மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியிருப்பது வைரலாகி இருக்கிறது.

முதல் வீடியோவில் தடுப்பூசியை விட ஆல்கஹால் தான் எல்லாத்துக்கும் தீர்வு என்று வாதாடுகிறார். நான் 35 வருடமாக குடிக்கிறேன். எனக்கு வேறு எந்த மருந்தும் தேவையில்லை என்று கூறியிருந்தார். அவர் சமீபத்தில் மற்றொரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் மதுபானக் கடைகளை திறக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதோடு மதுக்கடைகளைத் திறந்து விட்டால் மருத்துவமனைகள் படுக்கைகள் அனைத்தும் கலியாகிவிடும். அரசாங்கத்திற்கு பிரச்சினையே வராது. ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினையும் வராது. மக்கள் அவரவருக்குள் சரக்கை ஊற்றிக் கொண்டால், உடனே உள்ளிருக்கும் கொரோனா வெளியே ஓடிவிடும் என்றும் அந்த வீடியோவில் கூறுகிறார்.

அதுமட்டுமா? அந்த வீடியோவை எடுத்த நபர் ஆண்டியிடம், ஊரடங்கு சமயத்தில் குடித்தீர்களா என்று கேட்டபோது, நான் சரக்கு வீட்டில் வாங்கி வைத்திருந்தேன். தற்போது அந்த ஸ்டாக்கெல்லாம் தீர்ந்து விட்டது. அதனால் கடைகளை திறக்கும்படி கேட்கிறேன் என்கிறார்.

டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டவுடன், பல பகுதிகளிலும் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெளியே பெரிய க்யூவில் மக்கள் நின்றனர். சரக்கை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டார்கள். அவற்றில் ஒருவர் தான் இந்த டோலி ஆண்டியும். அதை வர் மகிழ்ச்சியாக வீடியோவில் தெரிவிக்கிறார்.

எந்த தடுப்பூசியும் மருந்துகளும் சரக்கு மாதிரி நம்மை கொரோனாவில் இருந்து காப்பாற்றாது. நான் 35 ஆண்டுகளாக குடிக்கிறேன். இதுவரை எந்த மருந்துகளும் சாப்பிட்டதே இல்லை. குடிக்கிறவர்கள் எல்லோரும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்கள் என செய்தியாளர்களிடமே கூறி மாஸ் காட்டியிருக்கிறார் ஆண்டி.

ஆண்டி வீடியோவ நீங்களும் பார்க்கணுமா? இந்த லிங்க் க்ளிக் பண்ணுங்க

Views: - 20

0

0