” குரங்குகளின் லூட்டி”: நீச்சல் குளத்தில் டைவ் அடித்து கும்மாளம்..!!

5 May 2021, 4:37 pm
monkey jump
Quick Share

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மஹாபலேஸ்வர் என்ற ரெசார்ட்டில் குரங்கு கூட்டம் ஒன்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

பொதுவாக கூட்டம் கூட்டமாக தான் வாழும் குரங்கின் குணத்தை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது அவை சற்று ஆக்ரோஷமாக தான் இருக்கும். இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் இரண்டாவது முறையாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அதிகம் வெளியே வராததால் கேளிக்கை விடுதிகள் போன்றவை தற்காலிகமாக செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில் மஹாபலேஸ்வர் என்ற ரெசார்ட்டில் குரங்கு கூட்டம் ஒன்று நீச்சல் குளத்தில் ஜாலியாக குதித்து விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. சுமார் பத்திருக்கும் மேற்பட்ட குரங்குகள் நீச்சல் குலத்திற்கு அருகிலுள்ள நிழற்குடையின் மேல் அமர்ந்து கொண்டு தண்ணீரில் டைவ் அடிக்கின்றன.

தண்ணீரில் மனிதர்கள் எப்படி டைவ் அடிப்பார்களோ அதே போல் குரங்குகளும் டைவ் அடிப்பதை பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளமான ட்விட்டரில் வைரல் ஆகி வருகின்றது

Views: - 205

1

0