பழைய பாலிவுட் பாடல்களில் வரும் டிஸ்கோ டாடி பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு இன்டர்நெட்டில் வைரலான பாட்டி

1 May 2021, 1:49 pm
Quick Share

லதா மங்கேஸ்கர் பாடிய மிகப் பிரபலமான ஹிந்தி பாடலான ஹஸ்டா ஹுவா நூரானி செஹ்ரா பாடலுக்கு பயங்கரமாக நடடிமாடி, மகிழ்ச்சியாக வாழ வயது ஒரு தடையில்லை என நிரூபித்திருக்கிறார் இந்த பாட்டி.

கொரோனா இரண்டாம் அலையும் அதன் சோகங்களும் சோசியல் மீடியா முழுக்க நிரம்பியிருக்கிற சமயத்தில் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்கிற வகையில் இதுபோன்ற சுவாரஸயமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாவது மனசுக்கு இதமா தான் இருக்கு.

https://www.india.com/viral/viral-video-disco-daadi-dances-on-old-bollywood-song-wins-the-internet-with-her-energetic-moves-watch-4621457/

சமீபத்தில், ஒரு வயதான பெண் ஒரு பழைய பாலிவுட் பாடலுக்கு மிக உற்சாகமாகக் குதித்து நடனமாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ முழுவதிலும் பாட்டி தன்னுடைய வயதையும் மீறி, பயங்கரமாக ஸ்டெப் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார். அவருடைய முகம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் அவருடைய நடனம் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. அதனால் ஏராளமானோர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Views: - 30

0

0