லாக்கரிலிருந்த பணத்தை “ஏப்பம்” விட்ட கரையான்… எவ்வளவு தெரியுமா?

23 January 2021, 6:54 pm
Quick Share

பாதுகாப்பு காரணங்களுக்காக, வங்கி லாக்கரில் வைத்திருந்த பணத்தை கரையான்கள் தின்ற சம்பவம், பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதோடு மட்டுமல்லாது, இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலம் வதோதராவின் பிரதாப் நகரில் பேங்க் ஆப் பரோடா கிளை உள்ளது. இந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர் ஒருவர், ரூ. 2,20,000 பணத்தை வங்கி லாக்கரில் வைத்து இருந்தார்.

அவசரமாக பணம் தேவைப்பட்டதையடுத்து, லாக்கரில் உள்ள பணத்தை எடுக்க வங்கி கிளைக்கு சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக்கரில் இருந்த பணத்தை கரையான்கள் சாப்பிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக, அவர் வங்கியில் புகார் அளித்தார். நீங்கள் லாக்கரில் என்ன வைக்கிறீர்கள், அது எவ்வளவு மதிப்புடையது என்பது உங்களைத்தவிர வேற யாருக்கும், வங்கி ஊழியர்களுக்கும் கூட தெரியாது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டனர். இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த நடைமுறையினை உறுதி செய்துள்ளது.

வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களின் விலைமதிப்பு மிக்க ஆவணங்களை பாதுகாக்க லாக்கர் சேவையை வழங்கி வருகின்றன. இதற்கு, வங்கிகள் வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக ஸ்டேட் பேங்க், யூனியன் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் ரூ. ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலும் (ஜிஎஸ்டி சேர்த்து), ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகள் ரூ. 1,500 முதல் 22,000 வரையிலும் (ஜிஎஸ்டி சேர்த்து) கட்டணமாக வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளை நம்பி விலையுயர்ந்த நகை, பணம், ஆவணங்களை லாக்கரில் வைத்தால், கரையான்களால் பணம் பறிபோன நிகழ்வு, வங்கி லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Views: - 4

0

0