போதையில் அம்மா கொலை; கொள்ளியில் சிக்கன் சமைத்த சைக்கோ மகன்

3 February 2021, 6:51 pm
Quick Share

குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகன், தனது தாயை போதையில் கொலை செய்து, அவரது சடலத்தை எரியூட்டி, அதிலேயே சிக்கன் சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில், பெரும் பேசுபொருளான இந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தது.

மகன் கொலையே செய்தாலும், அம்மா தனது மகனை வெறுப்பது இல்லை என்பது கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால், பெற்ற 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த அம்மாவை, மது என்ற கொடூர அரக்கனுக்கு அடிமையாகிய மகன் ஒருவன், கொலை செய்த சம்பவம் ஜார்கண்டில் நடந்தது. கொலைக்கு பின் அவர் செய்த காரியம் தான், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் வசிக்கும் 35 வயது நபர் பிரதான் ஷாய். தனது தாய் சுமி ஷாய் (60 வயது) உடன் வசித்து வந்த இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார்.

போதையில் தனது தாயுடன் அடிக்கடி தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். குடித்துவிட்டு வீட்டுக்கு வராதே என மகனை தாய் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், போதையில் இருந்த மகனுடன் வாக்குவாதம் செய்த தாயை கடுமையாக எச்சரித்த மகன், ஒருகட்டத்தில் தாக்க துவங்கினார். கட்டையை கொண்டு தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல், சைக்கோ தனமாக நடந்து கொண்டிருக்கிறார் அந்த மகன்.

தாயின் சடலத்தை வீட்டு வாசலிலேயே எரியூட்டிய மகன், அந்த தீயில் சிக்கன் கறியை சமைத்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் போது, பிரதான் ஷாயின் சகோதரியும் உடனிருந்திருக்கிறார். இதுகுறித்த அருகில் வசிப்பர்கள் கொடுத்த பூகாரை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை ஒருவனை எந்த எல்லைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது என பாருங்கள்!

Views: - 0

0

0