இவரு ஐன்ஸ்டீனா? வைரஸா? பானிபூரி வியாபாரிகள் தாக்குதல் சம்பவத்தில் கைதான நபர் வைரல்!!

24 February 2021, 9:26 pm
Quick Share

உத்திரபிரதேசத்தில் பானிபூரி வியாபாரிகளுக்கு இடையே நடந்த தாக்குதல் சம்பவத்தில், உருட்டு கட்டை, இரும்பு கம்பி கொண்டு தாக்கி கொண்டனர். இதில் கைதான ஒருவர், ஒரு சாயலில் ஐன்ஸ்டீன் போலவும், மற்றொரு சாயலில் 3 இடியட்ஸ் படத்தில் வரும் வைரஸ் போலவும் காட்சியளிக்க, அவரை கொண்டு தயாரிக்கப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் பராவூரில், பானிபூரி, மசாலாபூரி கடைகள் அதிகம் உள்ளன. வாடிக்கையாளர்களை அழைப்பதில் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றி, இரு தரப்பினர், உருட்டு கட்டை, இரும்பு கம்பிகள் கொண்டு கொடூரமாக தாக்கி கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர்; 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவர், பரட்டை தலையுடன் பார்க்க ஒரு சாயலில் ஐன்ஸ்டீன் போலவும், மற்றொரு சாயலில், அமீர்கான் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 3 இடியட்ஸ் (அட.. நண்பன் பட சத்யராஜ் கேரக்டர் தான்..) படத்தில், போமன் இரானி நடித்த வைரஸ் கதாபாத்திரம் போல் இருப்பதாகவும் கலாய்த்த நெட்டிசன்கள், அவரை கொண்டு மீம்ஸ்கள் தயாரித்து வருகின்றனர். இந்த மீம்ஸ்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 10

0

0