பாலிவுட் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் யானை! வைரல் வீடியோ

17 April 2021, 5:16 pm
Quick Share

பாலிவுட் பிரபல சூப்பர் ஹிட் பாடலான ‘நமோ நமோ சங்கரா..’ பாடலுக்கு, லக்ஷிமி என்ற யானை, தனது தனது தலையை அசைத்து அட்டகாமாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் அனைவரும் திரைப்படங்களுக்கு ரசிகர்களாகவே இருக்கிறார்கள். பாலிவுட் பாடல்களுக்கு வெளிநாட்டிலும் ரசிகர்கள் ஏராளம். இந்த ஆர்வம் மனிதர்களுக்கு மட்டும் தானே என நினைத்தால், இந்த வீடியோவை பார்க்கும் வரை காத்திருங்கள். பாலிவுட் பாடலுக்கு யானை எப்படி டான்ஸ் ஆடுகிறது என பாருங்கள்.. வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை கேரள யானைகள் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சாரா அலி கான் மற்றும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கேதார்நாத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நமோ நமோ சங்கரா..’ என்ற பாடலின் இசைக்கு ஏற்றவாறு யானை ஒன்று நடனம் ஆடுகிறது. சூப்பர்ஹிட் பாடலான இதற்கு, லக்ஷ்மி என்ற கேரள யானை தனது தலை, கால்கள், தும்பிக்கை மட்டுமல்லாமல், வாலையும் ஆட்டி நடனமாடுகிறது. இந்த வீடியோவை வைரலாக்கி உள்ள நெட்டிசன்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே 6 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

“ஆஹா இந்த யானை என்னைவிட நன்றாக நடனமாடுகிறது” என்று ஒருவர் எழுத, மற்றொருவர் “நான் பார்த்த மிக அழகான யானை” என்று கருத்து பதிவிட்டிருக்கிறார். மிகவும் சோர்வான நாட்கள் மட்டுமல்லாமல் பரபரப்பான நாட்களில் கூட, உங்கள் முகங்களில் புன்னகையை வர வைப்பதால் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

Views: - 36

0

0