சாப்பாட்டு ராமனா நீங்க? அப்போ புல்லட் ஜெயிக்கலாமே!

20 January 2021, 3:08 pm
Quick Share

புனேவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், 4 கிலோ எடை கொண்ட ‘புல்லட் தாலி’ அசைவு உணவுகளை, 60 நிமிடத்தில் சாப்பிட்டால், ராயல் என்பீல்ட் பைக் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடையில் வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

சாப்பாட்டு பிரியர்களுக்காகவே அவ்வப்போது நம் ஊரில் போட்டி நடத்தப்படுவது வழக்கம். புரோட்டா, இட்லி என நம் ஊர் ஆட்கள் நடத்தி கொண்டிருக்க, பூனேவில் உள்ள ஒரு கடை, நான்–வெஜ் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் வெற்றி பெற்றால் ராயல் என்பீல்ட் பைக் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

புனேவில் உள்ள ‘ஹோட்டல் சிவ்ராஜ்’ இந்த புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஹோட்டல் ஓல்டு மும்பை – புனே நெடுஞ்சாலையில், வாட்கான் மாவலில் அமைந்துள்ளது. இதுபோன்ற சுவாரஸ்யமான போட்டிகளுக்கு ‘ஹோட்டல் சிவ்ராஜ்’ ஏற்கனவே புகழ் பெற்றிருந்தது. முதலில் 8 கிலோ ‘ராவன் தாலி’யை அறிமுகப்படுத்தி இருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுப் பணத்துடன், உணவுக்கு கட்டனமும் வசூலிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது அட்டகாசமான ‘புல்லட் தாலி’ போட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், சுர்மாய் ஃப்ரை, பாம்ஃப்ரெட் ஃபிஷ் ஃப்ரை, இறால் பிரியாணி, சோல் காடி, சிக்கன் சுக்கா, உலர் மட்டன், மட்டன் மசாலா உள்ளிட்ட பல நான்–வெஜ் அயிட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 4 கிலோ எடை இருக்கும் இந்த புல்லட் தாலியை வெறும் 60 நிமிடங்களுக்குள் காலி செய்ய வேண்டும். ஒரு ‘புல்லட் தாலி’யின் விலை 2500 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 ராயல் என்பீல்ட் பைக்குள் பரிசாக வழங்கப்படுகிறது.

உங்களால் வெறும் 60 நிமிடங்களில் இந்த ‘புல்லட் தாலி’யை சாப்பிட முடியும் என நினைக்கிறீர்களா? அப்ப ஓட்றா வண்டிய பூனேவுக்குனு கிளம்பி போங்க.. வரும் போது புல்லட்ல வருவோம்…!

Views: - 3

0

0