70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எச்சங்கள்! விஞ்ஞானிகள் வியப்பு

Author: Udhayakumar Raman
14 March 2021, 2:58 pm
Quick Share

சீனாவில் பாதுகாக்கப்பட்ட கருக்கள் கொண்ட முட்டைகளின் கூட்டில் அமர்ந்திருக்கும், 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் புதைபடிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் இனம் அழிந்து விட்டது. தொழில்நுட்ப உதவியுடன் டைனோசரை நம் மக்கள் திரையில் கண்டு ரசித்தனர். டைனோசர் குறித்த ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் எச்சங்கள் கண்டறியப்பட்டது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கன்ஷோ நகரின் ரயில் நிலையம் அருகே, ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது, 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் டைனோசரின் புதைவடிகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதிசயத்திக்கும் வகையாக, பாதுகாக்கப்பட்ட கருக்கள் கொண்ட முட்டைகளின் கூட்டில் டைனோசர் அமர்ந்திருப்பதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். சுமார் 24 முட்டைகள் கொண்ட கூடு ஒன்றில், ஓவிராப்டோரோசர் வகை டைனோசர் அடை காப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 7 முட்டைகள் பாதிக்கப்படாமல் கருவுடன் இருப்பதும், டைனோசரின் எலும்பு, எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உலகில் இப்போது வாழும் பறவைகளை போல, இந்த டைனோசர், அதன் முட்டைகள் அடை காத்து வைத்திருப்பதும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த டைனோசரின் புதைபடிவ கண்டுபிடிப்பு, டைனோசர்களில் மிகவும் அரிதானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஒற்றை புகைபடிவத்தில் எவ்வளவு உயிரியல் தகவல்கள் கிடைக்கப் போகிறது என்பது பெரும் ஆச்சரியமாக அமைய போகிறது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Views: - 46

0

0