பாரம்பரிய வீட்டை வெறும் 87 ரூபாய்க்கு விற்ற ஜூனியர் – தற்போது கோர்ட் வாசலில்…..

23 February 2021, 2:33 pm
Quick Share

மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்பிலான பாரம்பரிய வீட்டை, ரூ.87க்கு விற்ற இளவரசன் மீது அவரது தந்தை வழக்குப்பதிவு செய்துள்ளார்.

எந்த நேரத்தில் யாருக்கு எது நடக்கும் என்பதை யாராலும் எப்போதும் கணிக்க முடியாது என்பதற்கு ஜெர்மனியில் நடந்த இந்த நிகழ்வே, சிறந்த உதாரணம் ஆகும். ஹேனோவர் மாகாணத்தின் இளவரசர் ஆன எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் சீனியர், பிரிட்டன் ராணி எலிசபெத்தின் தூரத்து உறவினர் ஆவார். எர்னஸ்ட் ஆகஸ்ட் சீனியரின் மகன், எர்னஸ்ட் ஆகஸ்ட் ஜூனியர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். சீனியரின் பல்வேறு எஸ்டேட்களை எர்னஸ்ட் ஆகஸ்ட் ஜூனியரே, தற்போது நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், மரீன்பர்க் பகுதியில் அமைந்துள்ள பல மில்லியன்களுக்கு மேற்பட்ட டாலர்கள் அளவில் மதிப்பிலான பாரம்பரிய வீட்டை, எர்னஸ்ட் ஆகஸ்ட் ஜூனியர், ஒரே ஒரு யூரோ, அதாவது இந்திய மதிப்பில் வெறும் ரூ.87க்கு விற்பனை செய்துள்ளார். 1867ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மரீன்பர்க் மாளிகையில், நவீன வசதிகள் அடங்கிய கோதிக் ரிவைல் மாளிகையில் 135 அறைகள் உள்ளன. மரீன்பர்க்கின் லோயர் சக்ஸோனி பகுதியில் அமைந்துள்ள இந்த பாரம்பரிய மாளிகை தொடர்பாக, எர்னஸ்ட் ஆகஸ்ட் சீனியர் மற்றும் ஜூனியருக்கும் இடையே பங்கீடு பிரச்சினை நிலவி வந்தது.

இந்த மாளிகை மிகவும் பழமையாகிவிட்டதால்,எர்னஸ்ட் ஆகஸ்ட் ஜூனியர் சமீபத்தில் தான் 23.4 மில்லியன் யூரோக்கள் அளவிற்கு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அதை தற்போது ஒரு யூரோ மதிப்பிற்கு அவர் விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, எர்னஸ்ட் ஆகஸ்ட் சீனியர், ஜூனியர் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜூனியர் தற்போது கோர்ட் படியேறி உள்ளார்.

Views: - 0

0

0