கோஸ்ட் ரைடரா? தானாக நகரும் பைக்.. தைரியமிருந்தால் பாருங்க!

3 February 2021, 7:26 pm
Quick Share

சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்று, தானாக நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேயோட வேலையாக இது இருக்குமோ என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்றை ஆம்பர் ஜெய்டி என்ற இளைஞர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆள் அரவமற்ற சாலை ஒன்றில், இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதில் சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தி வைக்கப்ப்டிருக்கும் பைக் ஒன்று திடீரென நகர்ந்து, சாலையில் சிறிது தூரம் சென்று விழுகிறது. இது அங்கிருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. பலரும் இது பேயின் வேலையாக இருக்குமோ என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து மிரண்டுள்ளனர். பார்த்தவர்களில் பலரும், பைக் தானாக நகர்ந்து சென்று விழுவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். சாய்வான பகுதியாக இருந்தால் கூட இது பெரிதாகி இருக்காது. சமதளத்தில் இருந்த பைக் விழுந்ததால் தான் இது குறித்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

சிசிடிவி வீடியோவில், இது நடந்தது அதிகாலை 4 மணி என நேரம் காட்டுகிறது. இது அமானுஷ்யம் தான் என
கூறும் நெட்டிசன்கள், இந்த காட்சிகள் சிசிடிவி.,யில் பதிவாகாமல் இருந்திருந்தால், இதனை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 7

0

0