பெட்டுக்கு கீழே சென்ற குழந்தை திடீர் மாயம் – வைரலாகும் வீடியோ

26 February 2021, 4:06 pm
Quick Share

படுக்கையில் படுத்திருந்த குழந்தை அழுதுகொண்டே கீழே இறங்கி, பெட்டுக்கு கீழே சென்ற நிலையில், அது காணாமல் போன வீடியோ, இணையதள உலகில் பெரும் வைரலாகி வருகிறது.

பெட்டுக்கு கீழே சென்ற குழந்தை, திடீரென்று மாயமான நிகழ்வு குறித்த வீடியோ, சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ள டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த பலர், இது அசாதாரண நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இது பேயின் செயல் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அந்த குழந்தையின் தந்தை ஜோஷ் டீன், இது அசாதாரண நிகழ்வு என்று குறிப்பிட்டு உள்ளார்.

படுக்கையில் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை, திடீரென்று, பெட்டில் இருந்து கீழே இறங்க முயற்சிக்கிறது. தலையணைகளின் உதவியால், அது கீழேயும் இறங்கி விடுகிறது. பின் பெட்டின் கீழே செல்லும் குழந்தை, அழுதவாறே மம்மி மம்மி என்று கத்துகிறது. பெட்டின் கீழே ஊடுருவி செல்லும் குழந்தை, திடீரென்று காணாமல் போகிவிடுகிறது. பெட்டிற்கு கீழே சென்ற குழநதையை, யாரோ இழுப்பது போன்று அந்த வீடியோவில் பதிவாகி உள்ள நிகழ்வு, அந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வீடியோ, தற்போது வரை 9 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு இருப்பினும், இந்த வீடியோவில் உள்ள நிகழ்வு குறித்து யாராலும் தெளிவான கருத்துக்கு வர இயலவில்லை என்பதே இதன் சோகம் ஆகும்.

Views: - 9

0

0