தங்க பிரியாணி சாப்பிடலாமா? துபாய்க்கு டிக்கெட் போடுங்க!!

23 February 2021, 7:14 pm
gold Biriyani - Updatenews360
Quick Share

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற உணவு வகை தான் ‘பிரியாணி’. அசைவ உணவு விரும்பிகள் பலரும் விரும்பி சாப்பிடுவதில் பிரியாணிக்கு முதல் இடம் உள்ளது. சைவ பிரியர்களும், வெஜிடபிள், மீல் மேக்கர் பயன்படுத்தி பிரியாணியை சாப்பிட்டு திருப்தி அடைவர். இந்நிலையில், உலகில் விலை அதிகம் உள்ள பிரியாணியை துபாய் ஹோட்டல் அறிமுகம் செய்திருக்கிறது.

துபாயில் இயங்கி வரும், ‘பாம்பே போரோ’ எனும் ஹோட்டல், ‘ராயல் பிரியாணி’ என்ற பெயரில், 23 காரட் தங்க பிரியாணி அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு பிளேட் தங்க பிரியாணி வாங்கினால் 6 பேர் தாராளமாக சாப்பிடும் வகையில் இது இருக்குமாம். பிரியாணியை பரிமாறுபவர்களும், தங்க நிற கவசங்கள் மற்றும் பளபளக்கும் தங்க கையுறைகளை அணிந்து பரிமாறுவார்களாம்.

இந்தியாவின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் பிரியாணி அரிசியைக் குறிக்கும் வகையில், நான்கு வகையான அரிசி வகைகளை இந்த டிஷ் கொண்டுள்ளது. ஐதராபாத், கோல்கட்டா, மும்பை என எந்த வகை வேண்டுமோ அந்த பதத்தில் பிரியாணி தயார் செய்யப்பட்டிருக்கிறது. இதனை ஆர்டர் செய்தால், 4 வெவ்வேறு வகை பிரியாணி சுவைகளில் சாப்பிட முடியும் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரியாணி உடன் ராஜ்புத் சிக்கன் கபாப் மற்றும் ஆட்டுக்கறி சாப்ஸ் கிடைக்கும். மேலும் முகலாய கோப்டாஸ் மற்றும் மலாய் சிக்கன் ரோஸ்டும் டிஸ்சில் சேர்க்கப்பட்டிருக்கும். மேலும் 3 வகையான கிரீமி காய்கறிகளுடன், ஒரு கிண்மம் ரைட்டாவும் கிடைக்கிறது. கபாப்பை மறைக்க கூடிய தங்க இலையும் உண்ணக் கூடியது தானாம். இதனை கேட்டாலே உங்களுக்கு உமிழ்நீர் சுரக்கும் தானே.. இந்த பிரியாணியின் விலை 1000 திர்ஹாம். இந்திய மதிப்பில் சுமார், 19,742 ரூபாய் மட்டுமே!!

Views: - 13

0

0