இது உண்மை தானா?: ஹாரி பாட்டர் ஸ்டைலில் ஒரு போஸ்ட் மேன்..வைரலாகும் வீடியோ..!!

19 April 2021, 5:57 pm
owl final - updatenews360
Quick Share

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹார்ரி பாட்டர் படத்தில் வருவது போல் ஆந்தை ஒன்று கடிதம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாரி பாட்டர் என்ற திரைப்படம் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான திரைப்படம். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற காட்சி ஒன்று நிஜத்தில் அரங்கேறியுள்ளது. வீடியோ ஒன்றில், ஒரு வீட்டின் ஜன்னலை அதன் உரிமையாளர் திறக்கிறார். அப்போது ஆந்தை ஒன்று வாயில் ஒரு கடிதத்தை கொண்டு வந்து உரிமையாளரிடம் கொடுக்கிறது.

அதனை பெற்றுக் கொண்ட உரிமையாளர் ஜன்னலை அடைத்துவிட்டு செல்கிறார். ஆனால் அந்த ஆந்தையோ அங்கிருந்து செல்லாமல் அவரை உற்றுநோக்குகிறது. பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ள வீடியோ விளையாட்டிற்காக எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. மேலும், இது ஹாரி பாட்டர் படத்தை நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

” மிஸ்டர் போஸ்ட் மேன் ” என்ற தலைப்புடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 85

0

0