98 வயது அம்மாவுக்கு நகம் வெட்டி விட்ட 65 வயது மகன்! வைரல் புகைப்படம்

15 April 2021, 10:03 pm
Quick Share

65 வயது பெரியவர் ஒருவர், 98 வயது நிரம்பிய தனது அம்மாவின் காலில் இருக்கும் நகங்களை தனது மடியில் வைத்து வெட்டி விடுகிறார். பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படம் நெட்டிசன்களை கவர, அது வைரலாக பரவி வருகிறது.

பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு ஒருபோதும் முடிவடையாதது. நம்மை பெற்றெடுக்கும் போது கண்ணும் கருத்துமாக அவர்கள் பார்த்துக் கொள்ள, வயதான பின் இது சுழற்சியாக மாறிவிடும். நாம் பெற்றோராகவும், அவர்கள் குழந்தைகளாகவும் மாறி விடுவார்கள். அப்போது நாம் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும்.

சிலர் இதனை தேவையில்லாத வேலை என நினைத்தாலும், கடினமான வேலை ஒன்றும் இல்லை. உலகில் பலரும் வயதானவர்களுக்கு மரியாதையை குறைத்து விடுகின்றனர். இது ஒரு கொடூரமான செயல். வயதானவர்கள் மீதான அன்பு ஒருபோதும் குறைந்துவிடக் கூடாது. பிள்ளைகள் அவர்களை இறுதி வரை கவனித்து கொள்ள வேண்டும். இதற்கு சரியான உதாரணமாக, புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அப்ரனீல் மலாக்கர் என்ற நபர் கிளிக் செய்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். அதில், 65 வயதான ஒருவர், 98 வயது நிரம்பிய தனது தாயின் கால்களை தனது மடியில் வைத்து, அவருக்கு நகங்களை வெட்டி விடுகிறார். இவர்கள் வேறு யாருமில்லை. மலாக்கரின் தந்தை மற்றும் பாட்டி தான்.

‘இந்த காதலுக்கு தனிப்பட்ட அன்னையர் தினம் தேவையில்லை. ஒவ்வொரு குழந்தையும் ஒரு தாயின் அன்பை அவர்களுக்கு திருப்பி தர வேண்டும்’ என பதிவிட்டு புகைப்படத்தை பகிர, அது நெட்டிசன்களின் இதயத்தை வருடி விட்டிருக்கிறது. லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிய, அது வைரலாக பரவி வருகிறது. 1500 முறை பகிரப்பட்ட இந்த புகைப்படம், 2400க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றிருக்கிறது.

Views: - 96

0

0