பூனைக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்: வைரல் வீடியோ

27 January 2021, 6:11 pm
Quick Share

நாய் ஒன்று பூனைக்குட்டி ஒன்றுக்கு பால் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 32 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, நெட்டிசன்களின் இதயத்தை கவர்ந்ததுடன், உலகுக்கு அது புதிய செய்தியையும் கூறி உள்ளது.

பொதுவாக, வெவ்வேறு விலங்கினங்கள், தோழமை கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. மிகவும் அதிசயமாக நடக்கும் அந்த வகை நட்பை கொண்டாட இன்டர்நெட்வாசிகள் மறப்பது இல்லை. அப்படி ஒரு சம்பவம் தான் நைஜீரியாவில் நடந்துள்ளது. நெட்டிசன்களும் அதனை கொண்டாடி வருகின்றனர்.

ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. நைஜீரியாவில் உட்புற கிராமம் ஒன்றில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் நாய் ஒன்று படுத்துக்கிடக்க, அதன் மடியில் பூனைகுட்டி ஒன்று பால்குடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். 443 பேர் ரீடுவிட் செய்துள்ளனர். பலரும் கமெண்ட்ஸ் மூலம் இந்த அரிய நட்பை வாழ்த்தி வருகின்றனர். ஒருவர், நாய்கள் மனிதரின் சிறந்த நண்பர்கள் என கருத்து பதிவிட, மற்றொருவர், இது தாய்மையின் அழகு என்றும் இயற்கை உறவுகளின் ஒரு அற்புதமான பார்வை என்றும் பதிவிட்டுள்ளார்.

நம்பமுடியாத இந்த வீடியோ, இயல்பாக நடந்து கொள்ளும் மனிதர்களை ஆச்சரியப்படுத்துவதில் வியப்பு இல்லை. நட்பு அல்லது அன்பு என்று வரும்போது விலங்குகள் எப்போதும் மனிதர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை இந்த வீடியோ உலகிற்கு நிரூபிக்கிறது. உலகம் அன்பால் நிரம்பட்டும் என்கிறீர்களா…!

Views: - 42

0

0