24 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் வாழ்க்கை – தற்போது திருமணம் செய்துகொண்ட தம்பதி : காரணம் இதுதான்..

1 March 2021, 2:38 pm
Quick Share

வீடற்ற நிலையில், 24 ஆண்டுகளாக லிவிங் டு கெதராக வாழ்ந்த தம்பதி, தற்போது திருமணம் செய்துகொண்ட நிகழ்வு, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில், 50 வயதான ரோஸலின் பெரர் மற்றும் 55 வயதான ரோம்மெல் பேஸ்கோ, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை சேகரித்து அதை உரிய கடைகளில் விற்று அன்றைய நாளுக்கான செலவுகளை மேற்கொண்டு வந்தனர். லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்த இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இருந்தபோதிலும், சிறிய பொறம்போக்கு இடத்தில், தங்களது 6 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். தங்களது விருப்பத்தை, நண்பர்களிடம் தெரிவித்தனர்.

இவர்களது வீட்டின் அருகே சலூன் கடை நடத்தி வந்த ரிச்சர்ட் ஸ்டிராண்ட்ஜ், இவர்களுக்கு உதவ முன்வந்தார். அருகில் உள்ள சர்ச்சில், இவர்களது திருமணம் நடைபெறும் பொருட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை, ஸ்டிராண்ட்ஜ் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக, ஸ்டிராண்ட்ஜ் கூறியதாவது, பெர்ரி மற்றும் பேஸ்கோவை எனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். அவர்களது காதல் தெய்வீகமானது என்று இப்பகுதியில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அவர்களை வறுமை அரக்கன் மிகவும் வாட்டி வந்தான். அவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. தினமும் கிடைக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை சேகரித்து, அதனை விற்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் அவர்கள் குடும்பம் நடத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களது திருமணத்திற்கு பல்வேறு நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 9

0

0