படத்தில் எத்தனை வாத்துக்கள் உள்ளன? குழம்பும் நெட்டிசன்கள்

1 February 2021, 5:19 pm
Quick Share

மிகவும் எளிய கேள்வியான ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு படத்தில் எத்தனை வாத்துக்கள் உள்ளன என்பதை கண்டுபிடியுங்கள் என கேள்வி ஒன்று பகிரப்பட்ட பலரும் தவறான பதில்களை அளித்த வருகின்றனர்.

ஆர்பிஜி குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்து நெட்டிசன்களுக்கு சவால் விடுத்தார். மிகவும் எளிமையான கேள்வி? இதில் எத்தனை வாத்துக்கள் உள்ளன? என அவர் படத்துடன் பகிர்ந்த அவரது போஸ்ட், சமூக வலைதளவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது.

படத்தில் இருக்கும் வாத்துக்களை எண்ணுவது எளிதாக தோன்றினாலும், படத்தை உற்றுப் பார்த்தால் மட்டுமே அது மிக கடினம் என தெரியவரும். இந்த புகைப்படத்தில் எத்தனை வாத்துக்கள் உள்ளன என்பதை நீங்கள் எண்ணி பாருங்கள். எளிமையாக எண்ணுவது போல் இருந்தாலும், சற்று கடினமே என்பதை நீங்கள் உணருவீர்கள்.

கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்து உள்ளனர். ஆச்சரியப்படும் வகையில், பெரும்பாலானோர் தவறான பதில்களையே அளித்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்ய, பலர் ரீடுவிட்டும் செய்துள்ளனர்.

https://twitter.com/hvgoenka/status/1354493564852400128/photo/1

சிலர் 19 வாத்துக்கள் இருக்கின்றன எனவும், சிலர் 9 வாத்துக்கள் இருப்பதாகவும் கருத்துகளை பதிவிட்டனர். முடிவில் அவரே சரியான பதிலை விளக்கத்துடன் அளித்தார். 16 வாத்துக்கள் தான் உள்ளன என அவர் படத்தில் வட்டமிட்டு டுவிட்டரில் பதிலை பகிர்ந்தார். இப்போது நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் எண்ணும்போது எத்தனை வாத்துகள் வந்தன?

டுவிட்டரில் இதுபோன்ற போட்டோக்கள் வைரலாகுவது இது முதன்முறை ஆகாது. கடந்த ஆண்டு இதுபோல, புலிகளை புத்திசாலித்தனமாக மறைத்து வைக்கப்பட்ட பதிவு ஒன்று ரைலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0