ஊனமான நாயை நடக்க வைத்த தேவதை! நெட்டிசன்கள் பாராட்டு

By: Udayaraman
7 February 2021, 9:47 pm
Quick Share

ஊனமான நாய் ஒன்றுக்கு, நர்ஸ் ஒருவர் தொடர் பயிற்சி அளிக்க, அந்த நாய் ஓடும் அளவிற்கு தேறி உள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களை கவர, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மாஜி பேஸ்கட்பால் பிளேயரான ரெக்ஸ் சாப்மென், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நடக்க முடியாத நாய் ஒன்றுக்கு, நர்ஸ் ஒருவர் பயிற்சி அளிக்கிறார். ஊனமான அந்த நாய்க்கு, தாங்கி பிடித்து, பந்தின் மேல் படுக்க வைத்து மசாஜ் செய்தும், நடைமேடையில் நடைபயிற்சியும் அளிக்கிறார். முதலில் காலை ஊன்றவே கூச்சப்பட்ட அந்த நாய், பின் மெல்ல மெல்ல நடக்கத் துவங்குகிறது. சுமார் ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவின் முடிவில், நாய் நன்றாக நடக்கிறது. நர்ஸ் உடன் டாக்டர் ஒருவரும் சேர்ந்து, அந்த நாய்க்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து, நோயில் இருந்து மீட்டிருக்கின்றனர்.

பொதுவாக நன்றியுள்ள ஜீவன்களாக அறியப்படும் நாய், மனிதர்களுக்கு உதவும் சம்பவம் அடிக்கடி நடக்கும். ஆனால், நாய்க்கு மனிதர் உதவும் நெகிழ்ச்சி சம்பவம் எப்போதாவது நடப்பதால், இது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து, அந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர். 3.5 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ள இந்த வீடியோவை, 2.3 ஆயிரம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர். 15.4 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். கமெண்ட் பாக்ஸில், பலரும் அந்த பெண்ணை தேவதை என வாழ்த்தி வருகின்றனர்.

Views: - 51

0

0