குழந்தை பாக்கியம் வேண்டிய சிறப்புப் பூஜை செய்யக் கோவில் சாமி சிலைகளைத் திருடி தம்பதி

3 February 2021, 6:16 pm
Quick Share

தெலுங்கானாவில் குழந்தை பாக்கியம் வேண்டிச் சிறப்புப் பூஜை செய்வதற்காகக் கோவிலில் ஒரு தம்பதி சாமி சிலைகளைத் திருடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சித்தேஷ், மற்றும் சுஜாதா, இவர்கள் இருவரும் திருமணமான தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி வெகு நாட்களாகக் குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி பல்வேறு கோவில்களுக்குச் சென்று வந்துள்ளது. அப்பொழுது இவர்களுக்கு யாரோ ஒருவர் வீட்டில் நாகதேவதை, கட்ட மைசம்மா, நரசிம்ம சுவாமி சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனச் சொல்லியுள்ளனர். இதை நம்பிய அந்த தம்பதியினர். அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி ஐதராபாத்திலேயே உள்ள நங்கள்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கோவல ரங்க நாயக சாமி கோவிலில் உள்ள இந்த மூன்று பித்தளை சிலைகளைத் திருடிச்செல்லத் திட்டமிட்டு கோவிலுக்குச் சென்று இந்த சிலைகளைத் திருடினர்.

இதையடுத்து இந்த சிலைகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் இந்த தம்பதியினர் தான் சிலைகளைத் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்தேஷை கைது செய்து இவர்கள் திருடிய பித்தளை சாமி சிலைகளையும் கைப்பற்றினர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் தங்களுக்கு ஒரு பூசாரிதான் இப்படி கோவிலில் உள்ள குறிப்பிட்ட சிலைகளைத் திருடிவந்து சிறப்புப் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனச் சொல்லியதை நம்பி தாங்கள் இருவரும் அந்த திருட்டைச் செய்ததாகக் கூறினார். போலீசார் தற்போது சுஜாதாவைத் தேடிவருகின்றனர். குழந்தை பாக்கியம் பெற வேண்டிய தம்பதியினர் கோவிலில் சாமி சிலைகளைத் திருடி சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 0

0

0