குளிக்கும் போது தூங்கிய ‘கும்பகர்ணன்’; வைரல் வீடியோ

Author: Udayaraman
7 January 2021, 4:16 pm
Quick Share

சோப்பு நுரை குமிழ்கள் நிறைந்நிருக்கும் பாத் டப்பில் குளிக்கும் நபர் ஒருவர், தன்னை மறந்து ‘கும்ப கர்ணனாக’ தூங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்..

ஆரோக்கியமாக வாழ தூக்கம் முக்கியமானது தான். ஆனால் எங்கெல்லாம் தூங்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. வகுப்பறை தூக்கம், பயண தூக்கம், வேலையில் தூக்கம் என்பதை கேட்டிருப்பீர்கள், சிலர் வாகனம் ஓட்டும் போது தூங்கி விடுகிறார்கள். இதனால் பெரும் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், குளிக்கும் ஒருவர் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 15 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், பாத் டப் முழுவதும் சோப்பு நுரைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் குளித்துக் கொண்டிருந்த நபர், தன்னையும், உலகத்தையும் மறந்து, தூங்கிக் கொண்டிருக்கிறார். சிறிது சிறதாக அவர், டப்பில் மூழக்கி கொண்டுள்ளார்.

அப்போது வீடியோ எடுத்தபடி அவரை எழுப்பும் பெண், “ஏய், நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?” என கேட்கிறார். அதற்கு அவர் தண்ணீரிலிருந்து இரும்பிக் கொண்டே, “நான் தூங்கிவிட்டேன்!” என பதில் அளிக்கிறார். தொடர்ந்து அச்சூழலை புரிந்து கொள்ள அவர் முயற்சிக்கிறார். ‘‘நீங்கள் இறந்திருப்பீர்கள்’’ என அந்தப் பெண் எச்சரிக்கும் போது, அவர் விரக்தியில், கைகளை தூக்கி மீண்டும் இரும்புகிறார்.

டிக்டாக் செயலியில் எடுக்கப்பட்டு, டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 3 மில்லியனுக்கும் அதிகமான பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி உள்ளது. பலரும் தங்கள் கருத்துக்ளை பதிவிட்டு வருகின்றனர். வீடியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Views: - 58

0

0