காயம் ஏற்பட்டால் இனி தையல் போட வேண்டியதில்லை – குளு இஸ் கம்மிங்

7 February 2021, 6:43 pm
Quick Share

அறுவை சிகிச்சைகளின் ஏற்படும்போது காயங்கள், வெட்டுகள் போன்றவற்றை மறைக்க இனி இந்த பசையே போதும் என்ற தகவல், மருத்துவ உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த பயோமெடிக்கல் துறை சார்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பசை குறித்த பேச்சே, சர்வதேச நாடுகளில் மருத்துவத் துறை நிபுணர்களிடையி பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது.
பயோமெடிக்கல் விஞ்ஞானிகள், தாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த பசைக்கு,, மெட்ரோ என்று பெயர் இட்டுள்ளனர்.

இந்த பசை,காயங்கள் மற்றும் வெட்டுக்களை, 60 வினாடிகளில் அடைத்து விடுகிறது என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் வெட்டுக்களை ஆற்ற நாம் இதுவரை அதனை தையல் போட்டு குணப்படுத்தி வந்து கொண்டிருந்தோம். சிலநேரங்களில், இந்த தையல் பிரிந்துவிடும் அபாயமும் இருந்துவந்தது. இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர்.

காயங்கள் மற்றும் வெட்டுக்கள் தோன்றிய இடத்தில் இந்த பசையை தடவி, புற ஊதாக்கதிர்களை செலுத்துவதன் மூலம், அந்த இடத்தில் பசை முழுவதும் ஊடுருவி, அந்த ஓட்டைகளை அடைத்து விடுகிறது.
இந்த பசை, அதிக எலாஸ்டிக் தன்மையுடன் இருப்பதால், நமது உடலில் சுருங்கி விரியும் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இது நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளில், 

இந்த பசை குறித்த சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், விரைவில் மனிதர்களிடமும் இதுகுறித்த சோதனை நடைபெற உள்ளது. ஆசியாவின் முன்னணி பயோபார்மசூட்டிகல்ஸ் நிறுவன தலைவர், கிரண் மசூம்தார் ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அரிய பசை குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Views: - 1

0

0