10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் 11 வயது சிறுவன்.. இது எப்படி சாத்தியம்?

3 February 2021, 6:36 pm
Quick Share

சட்டீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுவன் 10ம் வகுப்புத் தேர்வு எழுத அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் லிவ்ஜோத் சிங் அரோரா இவன் அம்மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். இவர் அம்மாநில கல்வித்துறை வாரியத்திடம் தான்10ம் வகுப்புத் தேர்வு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தான். இதன் அடிப்படியில் அம்மாநில கல்வித்துறை வாரியம் இந்த சிறுவனுக்கு ஐக்யூ (IQ)சோதனை செய்ய முடிவு செய்தது. அதன்படி நடந்த சோதனையில் இந்த சிறுவனின் ஐக்யூ(IQ)16 வயது சிறுவனின் ஐக்யூ(IQ)க்குவிற்கு இணையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனிற்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அம்மாநில அரசு அந்த சிறுவனிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து அந்த சிறுவனின் தந்தை குருவிந்தர் சிங் அரோரா கூறும் போது தனது மகன் ஏற்கனவே தேர்விற்குத் தயாராகி வருவதாகவும், தற்போது அனுமதி கிடைத்தது தனது மகனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் “அவன் 3ம் வகுப்பு படிக்கும்போதே அவன் கடினமான கணக்குகளை நொடியில் தீர்வு காண்பதை அறிந்தோம். அதனால் அவனது ஐக்யூ(IQ)வை மேம்படுத்தப் பல முயற்சிகளை எடுத்தோம். தற்போது அவனது ஐக்யூ(IQ) பொதுத் தேர்வு எழுதும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நாங்கள் அவனிடம் எந்த விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. அவன் பொதுத்தேர்வை வெற்றி கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

11 வயது சிறுவன் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவது அம்மாநிலத்திலேயே இதுதான் முதன் முறை என அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 14

0

0