நடுக்கடலில் மீனவர்களோடு நீச்சல் அடித்து மகிழ்ந்த ராகுல் காந்தி! வைரல் புகைப்படங்கள்

24 February 2021, 11:50 pm
Quick Share

கேரளா சென்றிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீனவர்களுடன் கடலில் குதித்து நீந்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிராமத்து சமையலில் அவர் தயாரித்த காளான் பிரியாணி டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. இந்நிலையில், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, கேரளா சென்றிருக்கிறார் ராகுல் காந்தி.

அங்கு மீனவர்களை சந்தித்த ராகுல், அவர்களுடன் உரையாடினார். அவர்களுடன் கடலில் மீன்களை பிடித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடலில் குதித்து மீனவர்களுடன் அவர் நீந்திய புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்த பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், கடலில் மீனவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்த ராகுல் காந்தி, மீனவர்கள் சிலர் கடலில் குதிப்பதை கண்டார். பின் தானும் கடலில் குதித்து நீந்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் பிடித்த மீன்களை கொண்டு, பிரஷாக தயார் செய்த மீன் கறியையும், பிரட்டையும் மீனவர்கள் ராகுல் காந்திக்க பரிமாற, அதனை அவர் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார். பின் அவர்களிடம், ‘உங்களது உழைப்பை நான் மதிக்கிறேன். நாங்கள் பல முறை மீன் சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் கடின உழைப்பையும், அது எப்படி எங்கள் தட்டிற்கு வந்து சேருகிறது என்பதையும் புரிந்து கொண்டேன்’’ என்றார்.

For example, Cialis acts 36 hours, and therefore the man can have sex the whole night and even day. cialis tablets Cialis may be used in combination with alcohol.

Views: - 7

0

0