காஷ்மீரில் திறக்கப்பட்ட பனிக்குடில் கஃபே! நாட்டிலேயே இதுதான் முதல்முறை
31 January 2021, 6:48 pmகாஷ்மீர் மாநிலம் குல்மார்க் நகரில் உள்ள கோலஹோய் ஸ்கை ரிசார்ட், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில், பனிக் குடில் கஃபேயை திறந்துள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் பனிக் குடில் கஃபே என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல துறைகள் பாதிப்புக்கு உள்ளானாலும், கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு துறை சுற்றுலா துறை. ஹோட்டல் துறையும் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது. கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் மெல்ல மீண்டு வந்தாலும், மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், காஷ்மீரின் குல்மார்க்கில், பனிக் குடில் கஃபே ஒன்றை, கோலஹோய் ஸ்கை ரிசார்ட், நாட்டிலேயே முதன்முறையாக திறக்கப்பட்டுள்ளது.
15 அடி உயரம், 26 அடி சுற்றளவுடன் அமைந்துள்ள இந்த கஃபேயின் மேற்கூரை, மேஜை உள்ளிட்ட அனைத்தும் பனிக்கட்டிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கஃபேயில், 16 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.
இதனுள் சூடான உணவு வகைகள் புதுமையான வகையில் பரிமாறப்படுகின்றன. இதனால் கவரப்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கு சாப்பிட குவிந்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலரும் கமெண்ட்டில், அங்கு கிடைக்கும் உணவு வகைகள் குறித்தும், அங்கு நிலவும் குளிர் குறித்தும் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். என்ன ஜாலியா குல்மார்க்குக்கு ஒரு டூர் போய்ட்டு வருவோமா…! பர்ஸ் வெயிட்டா இருந்தா ஜாலியா கிளம்புங்க பாஸ்…!!
0
0