ஏர்போர்ட்டில் வயாகரா மாத்திரையுடன் சிக்கிய இந்தியர்! அதுக்காக இவ்வளவு மாத்திரையா?

Author: Udayaraman
7 February 2021, 10:17 pm
Quick Share

அமெரிக்காவிலுள்ள சிக்காகோ விமான நிலையத்தில், இந்தியர் ஒருவர் வயாகரா மாத்திரைகளுடன் சிக்கினார். நண்பருக்கு கொண்ட செல்வதாக கூறிய அந்த நபரிடம் மொத்தம் 3,200 வயாகரா மாத்திரைகள் இருப்பதை கண்டு சுங்கத்துறை அதிகாரிகள் மிரண்டு போய் இருக்கின்றனர்.

காம உணர்வுகளை அதிகரிக்க ஆயிரக்கணக்கில் செலவளித்து, வயாகரா மாத்திரைகளை வாங்கி பலர் சாப்பிட்டு வருகின்றனர். விறைப்பு தன்மை பிரச்சனையை குணப்படுத்த பெரும்பான்மையான ஆண்கள் இந்த வயாகராவை தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். இது அந்த பிரச்சனைக்கு தீர்வு தருவது போன்ற மாயையை ஏற்படுத்தி விட்டு, பின் பெரிய பக்க விளைவுகளை தரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்படியிருக்க, அமெரிக்காவில், இந்தியர் ஒருவர் 3,200 வயாக்ரா மாத்திரைகளுடன் விமான நிலையத்தில் சிக்கியிருக்கிறார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவரது கைப்பையை ஸ்கேன் செய்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். அதில் சுமார் 3,200 மாத்திரிகளை இருந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவை அனைத்தும் வயாகரா மாத்திரிகள் என்பது தெரிந்து அதிர்ந்து போயினர். அந்த மாத்திரிகளின் இந்திய மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாய்.

தொடர்ந்து மாத்திரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணையை துவக்கினர். முதலில் தகவல்களை தெரிவிக்க மறுத்த அந்த நபர், பின், நண்பருக்காக கொண்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். அதற்காக இவ்வளவு மாத்திரைகளா என அதிகாரிகள் கேட்க, அவரது மருத்துவ தேவைகளுக்காக வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்.

அவரது தகவல்கள் அனைத்தும் ஒன்றுக்கு பின் முரணாக இருக்க, கடைசி வரை அதிகாரிகளால் உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து கைபற்றப்பட்ட அனைத்து வயாகரா மாத்திரிகளையும், அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மானம் போச்சு என்கிறீர்களா..!

Views: - 52

0

0