மிடில் கிளாஸ் மீம்கள்! பட்ஜெட்டை குறிவைத்து தெறிக்கவிடும் டுவிட்டர்வாசிகள்!

1 February 2021, 5:20 pm
Quick Share

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் – 2021ஐ தாக்கல் செய்தபின், இன்டர்நெட் முழுவதும் பட்ஜெட் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு சலுகைகள் இல்லை என்பதை குறிவைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பகிர்ந்து வருவது வைரலாகி உள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதன் முதாலாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டை மொபைல் ஆப் மூலம் அவர் வாசித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட் ஆகும். நிர்மலா சீதாராமனுக்கு 3வது பட்ஜெட் ஆகும்.

நாடாளுமன்றத்தில், திங்கள் கிழமை காலை 11 மணி முதல் பட்ஜெட் வாசிப்பு துவங்கியது. 2021 வரவு செலவு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா ஒழிப்பு, கிராமப்புற மேம்பாட்டுக்கான செலவினங்களை அதிகரிப்பது, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தாராளமாக ஒதுக்கீடு செய்தல், அதிக பணம் செலுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு இதில் சிறப்பு சலுகைககள் எதுவும் இல்லை என கூறப்பட்டு, மீம்ஸ்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

https://twitter.com/sagarcasm/status/1356119471300222977/photo/1
https://twitter.com/nickhunterr/status/1356109765827461123/photo/1
https://twitter.com/Bhole6ture/status/1356115841297866753/photo/1
https://twitter.com/pra_tea_k/status/1356110693838311424/photo/1
https://twitter.com/aryaKeshav/status/1356119896979959812/photo/1

இதில் அப்பர் கிளாஸ், லோயர் கிளாஸ் மக்களுக்கு பயன் பெரும் வகையில் பட்ஜெட் உள்ளது எனவும், மிடில் கிளாஸ் மக்கள் தான் பாவம் எனும் தோணியிலும் மீம்கள் தயார் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இதனால் டுவிட்டர் வலைதளம் களைகட்டி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் காமெடியாக வலம் வரும் மீம்ஸ்களை, தொடர்ந்து ரீடுவிட் செய்து வருகின்றனர். ஐயோ பாவம் என பலரும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0