உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு; எத்தனை ஆண்டுகள் தெரியுமா?

14 January 2021, 8:49 pm
Quick Share

இந்தோனேஷியாவில் 45,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடியின மனிதர்கள் வரைந்த, குகை ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழம்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள அந்த ஓவியம் ஒரு பன்றியின் உருவம். மற்ற இரு பன்றி ஓவியம் சிதலமடைந்து காணப்படுகிறது.

உலகின் பழங்கால குகை ஓவியம் குறித்த தகவல்கள், சயின்ஸ் அட்வான்ஸ் என்ற இதழில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் உலகின் பழமையான ஓவியம் என ஒரு பன்றியின் ஓவியம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த ஓவியம் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள, கிரிஷிப்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மாக்ஸிம் ஆல்பர்ட் என்பவர் கூறியது: இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி தீவில், கடந்த 2011 ஆம் ஆண்டு, பழமையான பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு லைம்ஸ்டோன் வகை கற்கள் குறித்து, லிங்க்ஸ்டேட் என்ற குகைக்குள் ஆராய்ச்சி நடந்த போது, ஒரு பன்றியின் ஓவியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த பன்றியின் ஓவியம் 136 சென்டி மீட்டர் நீளமும், 54 சென்டி மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு பன்றி, மற்ற பன்றிகளை நோக்கி வருவதுபோல இந்த பழங்கால ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அடர் சிவப்பு நிற நிறமியை கொண்டு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. எதிரில் இருக்கும் மற்ற இரு பன்றிகளின் ஓவியங்களும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் இந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Views: - 4

0

0