கொரோனா தடுப்பூசி போட்டாச்சா – பிடி பாஸ்போர்ட் : அசத்தும் இஸ்ரேல்

1 March 2021, 1:22 pm
Quick Share

இஸ்ரேல் மக்கள், தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு ஏற்ற வகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு சிறப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு, இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை பெரும்பாதிப்புகளுக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், இஸ்ரேலும் இதற்கு தப்பவில்லை. தற்போதும், இஸ்ரேல் நாட்டில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் என்ற அளவில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாத துவக்கத்தில், 9.9 சதவீதமாக இருந்த புதிய பாதிப்பு விகிதம், தற்போது 6.1 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. இந்நிலையில்,  இஸ்ரேல் மக்கள், தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு முன்பாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாகு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு மக்கள் அளித்து வரும் பங்களிப்பிற்கு நன்றி. தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு, பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கிரீன் சிக்னல் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டின் மக்கள்தொகையில், 50 சதவீத மக்களுக்கு, கொரோனா முதற்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

4.5 மில்லியன் மக்கள், அதாவது நாட்டின் மக்கள்தொகையில்ல 95.8 சதவீதத்தினருக்கு இரண்டுகட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அவைகள் மேலும் தெரிவித்துள்ளன.
அரசின் இந்த நடவடிக்கை, மக்களிடையே,பொருளாதார விவகாரத்தில் வேறுபடுத்துவதாக உள்ளதாக பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Views: - 9

0

0