கொரோனாவால் ஜப்பானில் அறுவடையை கொண்டாடும் நிர்வாண திருவிழா ரத்து! வட போச்சே…

24 February 2021, 11:41 pm
Quick Share

500 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜப்பானின் நிர்வாண திருவிழா, நடப்பாண்டில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அறுவடையை கொண்டாட விவசாயிகள் நிர்வாணமாக இந்த விழாவில் கலந்து கொண்டு புனித குச்சியை கண்டுபிடிப்பார்கள்.

ஜப்பானில் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை ‘ஹடாகா மஸ்துாரி’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கொண்டாடுவர். சிறப்பான அறுவடை காலத்தை குறிக்கும் வகையில் ஹோன்சு தீவில் உள்ள சைதாய்ஜி கனோனின் கோவிலில் விவசாயிகள் கூடுவர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உடைகள் இன்றி, இந்த நிர்வாண திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்பர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புனித குச்சிகளை எடுக்க செல்வதற்கு முன், போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தண்ணீரில் மூழ்கி எழுகின்றனர். கோவிலை சுற்றி வந்து விவசாயிகள் நிர்வாணமாக காத்திருப்பர். அப்போது ‘சிங்கி’ என்றழைக்கப்படும் சுமார் 20 செ.மீ நீளமுள்ள இரண்டு அதிர்ஷ்ட குச்சிகள், வேறு சில மரக்குச்சிகளுடன் இணைத்து வீசப்படும். அந்த அதிர்ஷ்ட குச்சிகளை பெறுவதற்கு விவசாயிகள் இடையே போட்டி நடக்கும். அது யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுவர்.

500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெறும் இந்த நிர்வாண திருவிழா, 2021 ஆம் ஆண்டில் நடைபெறாது எனவும், கொரோனா பரவலை குறைக்கும் வகையில் அது ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இந்த திருவிழாவில் ஜப்பான் முழுவதில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்தும் பலர் பங்கு கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Skip to content. vgrmalaysia.net However a few days before a comprehensive evaluation includes the following sites represents the tension on the syndrome.

Views: - 4

0

0