ஹேர் கட் செய்ய மறுக்கும் சிறுவன்; வைரல் வீடியோ 2.0

27 January 2021, 2:09 pm
Quick Share

‘முடிவெட்ட எனக்கு பிடிக்கவில்லை; ஹேர் கட் செய்பவர் மோசமானவர்’ என ‘ஹேர் கட்’ வைரல் சிறுவன் கியூட்டாக அழுது கொண்டே சொல்லும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘ஹேர் கட்’ சிறுவனின் முதல் வீடியோவை நீங்கள் பார்த்திருந்தால், உங்களுக்கு மற்றொரு சிரிப்பு விருந்து காத்திருக்கிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக, முடிவெட்டாமல் நீண்ட முடியுடன், சலூனில் முடி வெட்டும் சிறுவனின் எதிர்வினைகள் கடந்த ஆண்டு வைரலாக பரவியது. அனுஷ்ருத் என்ற அந்த சிறுவனையும், அவரது அப்பா அனுப்பையும் ஒரே நாளில் பிரபலம் ஆக்கியது அந்த வீடியோ. வீடியோவில் அவன் காட்டிய அப்பாவித்தனம், முடி வெட்டுபவர் மீது அவர் காட்டிய கோபம், அடக்க முடியாமல் பீறிட்ட அழுகை என வெரைட்டி காட்டிய அந்த சிறுவனை வைத்து மீம்கள் பல வலம் வந்தன.

இந்நிலையில், சிறுவன் முடி வெட்டிக்கொள்ளும் இரண்டாவது வீடியோவை, அவரது அப்பா தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். இரண்டு நிமிட நீளமான அந்த வீடியோ கிளிப்பில், சிறுவன் ஒரு நாற்காலியில் வெள்ளை மற்றும் நீல நிற துணி கொண்டு போர்த்தி உட்கார்ந்திருக்கிறான். சிறுவனிடம் பேசும் அவனது அப்பா, திசை திருப்ப முயற்சிக்கிறார். அப்போது எனக்கு முடிவெட்ட பிடிக்கவில்லை என அடம்பிடிக்கும் சிறுவன், ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு, ‘நீங்கள் மோசமானவர்’ என முடிவெட்டுபவரிடம் பதிலளிக்கிறான்.

சில நொடிகள் கழித்து புலி போல் கர்ஜிக்கும் சிறுவன், நான் வழுக்கையாகி விடுவேன் என கூச்சலிடுகிறார். இவ்வாறு அவர் அந்நியன் விக்ரம் மாதிரி வேரியேஷன் காட்ட, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. டுவிட்டர் பயனர் ஒருவர், உனது வீடியோவுக்காக காத்திருந்தேன் என பதிவிட, மற்றொருவர், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உனது பேச்சை என்றும் நினைவில் வைத்திருப்பர் என பகிர்ந்தார்.

Views: - 21

0

0