இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யமாட்டார்கள் ஏன் தெரியுமா?

2 March 2021, 1:58 pm
Quick Share

நம்முடைய மனதில் பல்வேறு வகையான கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனால் அவற்றில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருக்கும். பலவற்றிற்கு யோசித்துப் பார்க்க முடியாத ஏதோவொரு விஷயம் காரணமாக இருக்கும். இதுபோல ஒரு கேள்வி தான் இது. இறந்தவர்குளின் உடல்களை ஏன் இரவில் பிரேதப் பரிசோதனை செய்வதில்லை. பகலில் மட்டுமே ஏன் செய்கிறார்கள் என்பது தான் அது.

பிரேதப் பரிசோதனை என்பதும் கூடு ஒருவகையான அறுவை சிகிச்சை தான். இறந்த உடல்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சை. இதன் மூலம் அந்த நபர் எப்படி இறந்து போனார் என்ற சரியான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.

ஒரு பிரேதத்தைப் பரிசோதனை செய்வதற்கு முன் அந்த நபரின் உறவினர்களுடைய ஒப்புதலைக் கட்டாயம் பெற வேண்டும். சில காவல்துறை சம்பந்தப்பட்ட கொலை வழக்குகளில் காவல்துறையினரின ஒப்புதலோடு பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.

ஏன் பகலில் மட்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது தெரியுமா? ஒரு நபர் இறந்து 6 முதல் 10 மணி நேரத்திற்குள் பொதுவாக பிரேதப் பரிசோதனை செய்யப்படும். அதற்குள் இறந்த உடல்களில் எந்தவித மாற்றங்களும் இருக்காது. ஆனால் அதற்கு பின் சின்ன சின்ன மாற்றங்கள் இயல்பாகவே உண்டாகக்கூடும்.

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையில் தான் பிரேதப் பரிசோதனை செய்யப்படும். ஏனெனில் இரவில் டியூப் லைட் அல்லது எல்.ஈ.டியின் செயற்கை ஒளியில் உடலில் உள்ள காயங்களின் நிறம் சிவப்பு நிறத்துக்கு பதிலாக ஊதா நிறத்தில் தோன்றும். அதை வைத்து உண்மையான காரணத்தை அறிவதில் சிரமம் ஏற்படும்.

இயற்கை மற்றும் செயற்கை ஒளியில் காயத்தின் மாறுபட்ட நிறம் காரணமாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில் சில சிரமங்கள் இருக்கின்றன. இதன் பின்னால் இந்த அறிவியல் காரணம் மட்டுமல்ல. சில மதங்களில் இரவில் இறுதிச் சடங்குகள் செய்ய மாட்டார்கள். அதுகூட இரவில் பிரேதப் பரிசோதனை இரவில் செய்யப்படாதற்குக் காரணமாக இருக்கலாம்.

Views: - 6

0

0