இறந்த மனைவியுடன் டான்ஸ் ஆடிய கணவன்! எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

2 February 2021, 2:26 pm
Quick Share

4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த மனைவியுடன், அவரது கணவன் கண்ணீர் மல்க நடனமாடிய சம்பவம் காண்போரை கரைய வைத்தது. விர்ச்சுவல் ரியாலியிட்டி மூலம் தென் கொரியா டிவி சேனல் ஒன்று இதனை சாத்தியப்படுத்தி உள்ளது.

தென் கொரியாவை சேர்ந்தவர் கிம் ஜங் சூ (வயது 51). இவர் தனது மனைவி மீது உயிரையே வைத்திருந்தார். இவர்களின் பாசத்தின் பரிசாக 5 குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாயப்பட்டு படுக்கையில் படுத்த அவரது மனைவி, உயிரிழந்து விட்டார். மனைவியின் நினைவில் உருகிய கிம், மீண்டும் அவரை ஒருமுறையாவது பார்க்கமாட்டோமா என ஏங்கியிருக்கிறார்.

அவருக்கு தென் கொரிய டிவி சேனல் ஒன்று உதவி செய்திருக்கிறது. மீட்டிங் யூ என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ டாக்குமன்டரியை தயாரித்துள்ள அந்த சேனல், அதில், கிம்முக்கு, அவரது மனைவியை சந்திக்க உதவி செய்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில், தாய் ஒருவர் அவரது மகளை சந்திக்கும் வாய்ப்பை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்நிகழ்ச்சி பெரும் ஹிட் அடித்த நிலையில், தற்போது கிம்மை அவரது மனைவியுடன் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது மனைவியை சந்தித்த கிம், அவருடன் நடனமாடுகிறார். ஒருகட்டத்தில் உடைந்து அழ துவங்குகிறார். இதனை பார்த்த கிம்மின் பிள்ளைகளும் அழுகின்றனர். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ காண்போரை கண்ணீர் கடலில் மிதக்கவிடுகிறது.

மனைவியை பிரிந்து வாடும் தங்கள் அப்பா, அந்த சோகத்திலிருந்து மீண்டு புதுவாழ்வை துவங்க இந்நிகழ்ச்சி உதவும் என நம்புவதாக அவரது பிள்ளைகள் தெரிவித்தனர். மனைவியை சந்திக்க வேண்டும் என்ற தனது கடைசி ஆசை நிறைவேறிவிட்டதாக கிம் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத்தால், இனி எதையும் சாத்தியப்படுத்தலாம் என நமக்கு புரியவைத்திருக்கிறது இந்த சம்பவம்.

Views: - 0

0

0