வீட்டை இப்படி கூட இடம் மாத்தலாமாம் – வைரலாகும் வீடியோ

7 February 2021, 5:49 pm
Quick Share

நாகாலாந்து கிராமத்தில், மக்கள் ஒன்று கூடி,வீட்டை தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்ற நிகழ்வு, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், அக்கிராம மக்கள் ஒன்று கூடி, ஒரு வீட்டையே, ஒரு இடத்திற்கு மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்த்து வைத்துள்ளனர்.
இந்த வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி, சுதா ராமென், ஒற்றுமையின் வலிமை என்ற பெயரில், டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த வீிடியோ, தற்போது அனைவராலும், வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு குடிசை வீட்டின் அடிப்பகுதியில் கட்டைகளால் கட்டி, அதன் 4 முனைகளிலும் பிடித்தவாறு 50க்கும் மேற்பட்டோர், வீட்டை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்கின்றனர். வீடு இடம்பெயர்த்து எடுத்து செல்வதற்கான காரணம் தெரியாத நிலையில், இந்த வீடியோவில் ஐஎப்எஸ் அதிகாரி சுதா ராமன், ஒற்றுமையின் வலிமை என்று தலைப்பிட்டு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ, டுவிட்டரில் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள், 9 ஆயிரம் பேர் பார்த்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து, வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள், சமூகவலைதளங்களில் இந்த வீடியோவிற்கு மிகுந்த வரவேற்பு அளித்து உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த எவரும், இதற்கு கமெண்ட் மற்றும் லைக் இடாமல் செல்வது இல்லை. இந்த வீடியோவை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் இந்த வீடியோவை, தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சூப்பர்ப், டீம் ஒர்க், வெல்டன் உள்ளிட்ட கருத்துகளால் வீடியோவை பாராட்டி வருகின்றனர்.

Views: - 0

0

0