கணவனின் கனவில் வந்த லாட்டரி நம்பர்; வாங்கிய மனைவிக்கு ரூ.637 கோடி ஜாக்பாட்!

30 January 2021, 2:18 pm
Lottery Jackpot - Updatenews360
Quick Share

தனது கணவனின் கனவில் வாந்த லாட்டரி எண்ணை கடந்த 20 ஆண்டுகளாக வாங்கி வந்த பெண் ஒருவருக்கு, அதிர்ஷ்டம் கை கூடி உள்ளது. கொரோனாவால் வேலை இழந்த அந்த பெண்ணுக்கு, 60 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை விழுந்ததுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 637 கோடி ரூபாய்!! அம்மாடியோவ்…

நிஜத்தில் வாழ முடியாத வாழ்க்கையை பலர் தங்கள் கனவில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி கனவில் வந்த ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறதா? ஆனால் இவருக்கு வந்த கனவு அவரை பெரும் கோடீஸ்வரராக மாற்றியிருக்கிறது.

டெங் பிரவடவ் என்ற 57 வயதான பெண் ஒருவர், கடந்த 1980ஆம் ஆண்டு 14 சகோதர, சகோதரிகளுடன் லாவோசில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். தனது கணவன் மற்றும் இரு பிள்ளைகளுடன் கனடாவில் மிகவும் சிக்கனமாக தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தனது கணவனின் கனவில், அதிர்ஷ்ட எண் ஒன்று தோன்றியிருக்கிறது. அதனை குறித்து வைத்துக் கொண்ட பிரவடவ், தொடர்ந்து லாட்டரியில் அந்த எண்ணையே வாங்கி வந்துள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அந்த எண்ணை வாங்கி வந்த அந்த பெண்ணுக்கு, தற்போது அதிர்ஷ்டம் கதவை தட்டவில்லை; கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கிறது. ஓன்டோரியா லாட்டரி மற்றும் கேமிங்கில், அவர் வாங்கிய அந்த எண்ணுக்கு முதல் பரிசாக 60 மில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 637 கோடி ரூபாய்.

மகிழ்ச்சி கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பிரவடவ் கூறுகையில், ‘‘நான் காற்றில் மிதப்பதை போல் உணர்கிறேன். முதலில் என்னால் இதனை நம்ப முடியவில்லை. என் கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது. வீடு ஒன்றை சொந்தமாக வாங்க போகிறேன். கொரோனா முடிந்த பின், உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆசைப்படுகிறேன்’’ என்றார். நமக்கும் தான் கனவு வருகிறது.. பேய் கனவும்.. யானை துரத்துவது போலவும் என்கிறீர்களா…!

Views: - 0

0

0