ஒரே நபருக்கு ஒரே ஆண்டில் இரண்டு முறை லாட்டரி சீட்டில் பரிசு! எவ்வளவு எனத் தெரிந்தால் உங்களுக்குத் தலை சுற்றிவிடும்!

14 January 2021, 11:01 am
Lottery - Updatenews360
Quick Share

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கிளின்டன், 54 வயதான இவர் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு பாருக்கு சென்றுள்ளார். அங்குச் சிறிது நேரம் பொழுதைக் கழித்துள்ளார். அப்பொழுது அந்த பாரில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக வைக்கப்பட்டிருந்த போர்டை பார்த்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார்.

அந்த லட்டரி சீட்டிற்கான முடிவுகள் வெளியானபோது இவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 50 ஆயிரம் டாலர் இந்திய மதிப்பில் ரூ36 லட்சம் பரிசு விழுந்திருந்தது. இதையடுத்து அவர் அந்த லாட்டரி சீட்டை எடுத்துக்கொண்டு அதற்கான பரிசை பெறச்சென்றார். இவருக்கு ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே போல ஒரு லாட்டரி சீட்டில் பரிசு விழுந்திருந்தது. தற்போது ஒரே ஆண்டில் அடுத்த லாட்டரி சீட்டுப் பரிசு இவருக்குக் கிடைத்தது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பணத்தை வைத்து அவர் புதிதாக ஒரு கார் வாங்கத் திட்டமிட்டுள்ளார். இவரது குழந்தைகள் தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருவதால் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளார். இவர் பொதுவாக லாட்டரி சீட்டு வாங்கும் போது சென்டிமெண்ட் பார்த்து வாங்கக்கூடியவராம். அவரது பிறந்தநாள் தேதி, அவரது மனைவியின் பிறந்தநாள் தேதி, குழந்தைகளின் பிறந்தநாள் தேதி, அவருக்குப் பிடித்த விளையாட்டு வீரரின் ஜெர்சி நம்பர், கார் நம்பர், போன் நம்பர் இப்படி ஏதாவது தனது வாழ்வில் தொடர்புடைய எண்கள் வரும்படியே லாட்டரி சீட்டுகளை வாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நபருக்கு ஒரே ஆண்டில் இரண்டு முறை லாட்டரி சீட்டுப் பரிசு அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Views: - 6

0

0