ரூ.163க்கு கடல் நத்தையை உணவுக்காக வாங்கிய ஏழைப்பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! கோடீஸ்வரி ஆனார்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2021, 11:11 am
Snail Crorepati - Updatenews360
Quick Share

தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஏழை பெண் ஒருவர், தங்கள் குடும்பத்திற்கு உணவு சமைக்க கடல் நத்தையை வாங்க, அதற்குள் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆரஞ்சு மெலோ முத்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் அடிக்கும்…

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கொட்சகோர்ன் தந்திவாட்குல். ஏழை பெண்ணான இவர், உள்ளூர் சந்தையில் உணவுக்காக 70 பாட் (ரூ.163) கொடுத்து கடல் நத்தைகளை வாங்கியிருக்கிறார். நத்தைகளை சிறிய துண்டுகளாக வெட்டியபோது. அதன் ஓட்டின் உள்ளே ஒரு வட்ட ஆரஞ்சு பொருள் இருப்பதை கண்டுபிடித்தார். முதலில் அதனை ஒரு பளபளப்பான கல் என நினைத்திருக்கிறார். பின்பு அதனை தன் தாயிடம் காட்ட, அது விலைமதிப்பில்லாத மெலோ முத்து என கூறியிருக்கிறார். இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.

முத்து 1.5 சென்டி மீட்டர் விட்டம் கொண்டிருக்கிறது. அதன் தரத்தை பொறுத்து, அது பல கோடிக்கு விலை போகும். நத்தையை விற்றவர் அதனை கேட்பார் என்ற அச்சத்தில், முதலில் அந்த பெண் வெளியே இதை கூறாமல் ரகசியமாக வைத்திருக்கின்றனர். தற்போது தனது தாயின் மருத்துவ தேவைக்காக அவர் அதனை விற்க முன்வந்திருக்கிறார்.

தாயின் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ஒரு மில்லியன் பாட்டுக்கும் (ரூ.23 லட்சம்) அதிகமாக தேவைப்படும் எனவும், இதனால் முத்தை தற்போது விற்க ஆசைப்படுவதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். மெலோ முத்துக்கு உரிய விலை தரும் சாத்தியமான நபர்களை அந்த குடும்பம் இப்போது தேடி வருகிறது.

மெலோ முத்துக்களில் பல வகைகள் இருந்தாலும், ஆரஞ்சு நிற முத்துக்கு மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் இருக்கிறது. அவை பொதுவாக தென் சீனக் கடல் மற்றும் மியான்மர் கடற்கரையில் காணப்படுகின்றன. அவை வால்யூடிடே எனப்படும் கடல் நத்தைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Views: - 76

0

0