திருமண மோதிரத்தை குப்பைக் கூளத்தில் தொலைத்த இளைஞன் – கிடைத்ததா..இல்லையா?

23 February 2021, 11:57 am
Quick Share

பிரிட்டனை சேர்ந்த இளைஞர், தன் மனைவிக்கு அளிப்பதற்காக வைத்திருந்த திருமண மோதிரத்தை, குப்பைக் கூளத்தில் விழுந்ததை, மீட்ட நிகழ்வு, டிரெண்டிங் ஆகி வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த 38 வயது இளைஞர் ஜேம்ஸ் ராஸ். சர்வதேச காதலர் தினத்தில், தமது மனைவிக்கு அளிப்பதற்காக திருமண மோதிரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தார். மறுநாள் காலை பரிசளிக்க நினைத்த அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
வாங்கி வைத்திருந்த திருமண மோதிரம், தவறுதலாக வீட்டின் குப்பை தொட்டியில் விழுந்து விட்டது. இதனை அறியாத அவரது குடும்பத்தினர், குப்பை வண்டி வரவே, அதில் அவர்கள் கொட்டி விட்டனர். பின்னர் சுதாரித்த ஜேம்ஸ் ராஸ், தனது வீட்டின் குப்பைத்தொட்டியில் விழுந்த மோதிரம், தற்போது குப்பைக் கூளத்திற்கு சென்றதை உணர்ந்தார்.

என்ன செய்வதறியாது தவித்த ஜேம்ஸ், வீட்டிலேயே அழுது புலம்பினார். அந்த நேரத்தில், என் கைகள் மிகவும் ஈரமாக இருந்தன. இதன்காரணமாக, நான் என் கைகளை உதறினேன். இது தவறுதலாக,அருகில் உள்ள குப்பை தொட்டியில் விழுந்துவிட்டது. நான் அதை கவனிக்கவில்லை. பின் அந்த குப்பை, குப்பை வண்டியில் போட்ட பின்னரே, மோதிரம் காணாமல் போய் இருந்ததை உணர்ந்தேன். உடனடியாக நிலையை குடும்பத்தினரிடம் தெரிவித்தேன்.


பின்னர், குடும்பத்தினரின் ஆலோசனையின்படி, திடக்கழிவு மேலாண்மை அலுவலகத்திற்கு சென்று, அங்கு இருந்த ஊழியர்களின் உதவியுடன், மோதிரம் தேடும் பணி நடைபெற்றது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், மோதிரம் கிடைக்கப் பெற்றது. இதன்பின்னரே, ஜேம்ஸ் ராஸிற்கு நிம்மதி பிறந்தது.
மாயமான மோதிரம், திரும்ப கிடைத்த மகிழ்ச்சியை, ராஸ், தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். இந்த காதலர் தினத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று ராஸ் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0