7 லட்சத்துக்கு வாங்குன வீடு! எவ்ளோ கோடி புதையல் கிடைச்சுருக்கு தெரியுமா?

5 February 2021, 8:46 pm
Quick Share

கனடாவில், வெறும் 10 ஆயிரம் டாலருக்கு வாங்கிய பண்ணை வீட்டில், 4 லட்சம் டாலர் மதிப்பிலான புதையல்கள் கிடைத்து, வீடு வாங்கியவரை அதிர்ஷ்டசாலி ஆக்கி உள்ளது. இதில் பழங்கால நாணயங்கள், வெள்ளி கட்டிகள், தங்க, வைர மோதிரங்களும் அடங்கும்.

ஒவ்வொறு மனிதனுக்கும் கனவு என்பது வரும். அதில் தனக்கு புதையல் கிடைத்து ஒரே இரவில் பெரும் பணக்காரன் ஆகி விடுவது போல் கனவு காண்பவர்கள் தான் அதிகம். ஆனால், அனைவருக்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்காது. கனவு பகல் கனவாய் தான் முடியும். ஆனால் இங்கு ஒருவரை பாருங்கள்.. கிணறு வெட்டி பூதம் கிளம்பியது என கேள்வி பட்டிருப்பீர்கள், ஆனால் இவருக்கோ, தங்க புதையல் கிடைத்திருக்கிறது.

கனடா நாட்டை சேர்ந்தவர் அலெக்ஸ் ஆர்ச்போல்ட். இவர் பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மறைந்த இசை ஆசிரியர் பெட் ஜோன் ரேக்கின் என்பவரின் பண்ணை வீட்டை சமீபத்தில் வாங்கியிருக்கிறார். 10 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம்) விலை கொடுத்து வாங்கிய இவரது வீட்டில், தோண்ட தோண்ட புதையல்களாக இருந்துள்ளன. அதன் மதிப்பு சுமார் 4 லட்சம் டாலருக்கும் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கும் மேல்…

அந்த வீட்டில் பழங்கால நாணயங்கள், தங்க, வைர மோதிரங்கள், வெள்ளி கட்டிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தனது புதையல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அலெக்ஸ் கூறுகையில், ‘நான் சந்தித்த விசித்திரமான பியானோ ஆசிரியர் பெட் ஜோன் ரேக்கின். அவர் உண்மையில் ஒரு கோடீஸ்வரர் என்று எனக்குத் தெரியாது. அவரது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பல அரிய நாணயங்கள், வெள்ளி கட்டிகள், தங்க, வைர மோதிரங்கள், விதவிதமான ஆடைகள் ஆகியவற்றை கண்டறிந்தோம்’ என கூறினார்.

Views: - 0

0

0